மாற்றுக் கொள்கைக்கான மறியல் போராட்டம்!

14.05.2013 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இந்தியாவின் நான்கு முனைகளிலிருந்தும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. அதன் நிறைவாக தலைநகர் டெல்லியில் மார்ச் – 19-ம் தேதி அன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில், உணவுப் பாதுகாப்பு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மருத்துவ வசதிகள் நிலச்சீர்திருத்தம் மற்றும் வீட்டுமனைப் பட்டா சாதி, மதம் மற்றும் பாலினப் பாகுபாட்டிலிருந்து விடுதலை ஊழல் எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை இந்திய நாடு முழுவதும் மறியல் போராட்டங்களில் ஈடுபட அறைகூவல் விடப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் மே 24-ம் தேதியன்று ஒன்றியத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மறியலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், ஏ.கே.பத்மநாபன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள். தலைமை தாங்குவோர் பட்டியல் இணைப்பில் உள்ளது.

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply