முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசே தலையிடு! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பல்லாண்டு காலமாக இரு மாநில மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வரும் இப்பிரச்சனையில் உச்சநீதிமன்றம் விரைவாக இறுதித் தீர்ப்பினை வழங்கி நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவின் உத்தரவின்பேரில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக அணையில் பல்வேறு துளைகள் போடப்பட்டது. ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் அணையை பாதுகாப்பதற்கு துளைகளை அடைப்பது அவசியம் என்பதை பல்வேறு வல்லுநர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு, துளைகளை அடைப்பதற்காக தமிழக பொறியாளர்களை அனுப்பியபோது கேரள மாநில போலீசார் தடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

மத்திய அரசு உடன் தலையிட்டு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்காக போடப்பட்ட துளைகளை அடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பருவமழை துவங்க உள்ள நிலையில் அவசர உணர்வுடன் மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வலியுறுத்துகிறது.

Check Also

தமிழ் மக்களின் வரலாற்று பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும்!

கீழடினுடைய அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply