முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண்க!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளது. உச்ச நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த நிபுணர்குழுவை  தமிழக அரசும், கேரளஅரசும்  ஏற்றுக் கொண்டு தங்கள் பிரதிநிதிகளை அக்குழுவில் இடம் பெறச் செய்துள்ளனர். அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது, அணை பாதுகாப்பு, அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.

நிபுணர்குழு பிரச்சனையின் தீவிரம் மற்றும் இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு   காலதாமதத்திறகு இடம் தராமல், தனது அறிக்கையை விரைந்து சமர்ப்பிப்பது அவசியம் என்றும், தமிழகம் கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக தொடரும் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனைக்கு  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில்  சுமுக தீர்வு காண  உரிய நடவடிக்கைகளை எடுத்திடுமாறும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இதற்கிடையே இருதரப்பு மக்களிடையேயும் பகைமை உணர்வு ஏற்படுத்தும்  பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு  இடம் தர வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மத்திய அரசு உடனடியாக தலையீடு செய்து,  தமிழக – கேரள அரசுகளிடம்   பேச்சு வார்த்தை நடத்தி,   இரு மாநில மக்களிடையேயும் நட்புறவு மற்றும் சகஜ நிலையை உறுதிப்படுத்துமாறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.  

Check Also

மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக!

கடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...

Leave a Reply