தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் ‘தி இந்து’ நாளேட்டின்’வாசக ஆசிரியராக’ இருந்தவருமான ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மூத்த பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் ‘தி இந்து’ நாளேட்டின்’வாசக ஆசிரியராக’ இருந்தவருமான ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் திகழ்ந்தார். ‘ Dalits in Dravidian land’ என்ற நூல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், போராட்டத்தையும், ஆதரவான இயக்கங்களையும் அவர் பதிவு செய்து, ஒரு பத்திரிக்கையாளர் என்பதையும் தாண்டி தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர். இடதுசாரி சிந்தனையாளராகவும் இருந்தவர்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

பி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன்.