மூன்று தொகுதி தேர்தல் குறித்து சிபிஐ(எம்) நிலைபாடு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து 21.10.2016 அன்று மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டடம் நடைபெற்றது. மூன்று தொகுதிகள்தான் என்றபோதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிற முறையிலும், இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது, அதையே கூட்டத்திலும் வலியுறுத்தியது. ஆயினும் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக் கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டது,

இருப்பினும் கட்சி அணிகள் மற்றும் மாற்று அரசியலை விரும்புவோர் மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையொட்டி 26.10.2016ல் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மக்கள் நலக் கூட்டணியின் முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி போட்டியிட வலியுறுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

இந்தியைத் திணிக்காதே! சிபிஐ(எம்) எச்சரிக்கை!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தமான ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இம்முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது.