மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்திடுக: சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் அவதிப்படும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு இப்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் புதுதில்லி, கொல்கத்தா, ஜெய்பூர், பெங்களூர் என இந்தியாவில் எந்த மெட்ரோ ரயில் கட்டணங்கi

ள விட அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலிலிருந்து விடுபட நினைக்கும் மக்களின் உணர்வை பயன்படுத்தி கூடுதல் கட்டணங்களை நிர்ணயித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் வியாபார நோக்கோடும், கொள்ளை லாபம் பார்க்கும் நோக்கோடும் செயல்படுத்துவது நடைமுறையாகி இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டமும் இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆனால் இந்தியா முழுவதும் இருக்கும் கட்டணத்தை விட அதிகமாக தமிழகத்தில் நிர்ணயித்திருப்பது மக்களின் பொருளாதார சுமைகளைப் பற்றி கவலைப்படாத அரசாக தமிழக அரசு இருப்பதையே வெளிப்படுத்துகிறது.

எனவே, உடனடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது.

மேலும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிற போது பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே கட்டுமான பணியின் போது விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.