ரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்

ரஃபேல் ஊழல் மீதான பொது விசாரணை கோரி நடைபெற்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது;

“ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), மேற்கொள்வதைத் தடுக்கவே, அதன் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மோடிக்கு வேண்டப்பட்ட அதிகாரியைக் காப்பாற்றும் நோக்கில் சிபிஐ இயக்குநரைச் சட்டவிரோதமாக நீக்கியுள்ளார்கள். ரஃபேல் ஊழல் குறித்து அவர் தீவிரமான முறையில் விசாரணையை மேற்கொண்டு வந்ததால்தான், திடீரென்று நள்ளிரவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலோக் வர்மா மீதான நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகள் காட்ட வேண்டும் என்பதற்காக, நாட்டின் பாதுகாப்புடன் எப்படியெல்லாம் சமரசம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இப்போது தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களும், அது தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளிகளுக்குச் சலுகைகள் காட்டுவதும் பிரிக்க முடியாதவைகளாகும்.”

Check Also

நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு

தமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தங்கள் தொடர்பாக அதிமுக அரசு மேற்கண்ட அணுகுமுறைகள் தமிழக சட்டமன்றத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.