ரூ.5 கோடி செலவில் #GST- ‘சிறப்பு அமர்வு’ – சந்தைப்படுத்தும் போக்கினை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்

ரூ.5 கோடி செலவில் #GST– ‘சிறப்பு அமர்வு’ – சந்தைப்படுத்தும் போக்கினை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் – தோழர் சீத்தாராம் யெச்சூரி

தான் செய்ய வேண்டிய வேலையை அரசு செய்து முடிக்கவில்லை. நாளைய ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு நாட்டு மக்களும் தயாரிப்போடு இல்லை. ஜி.எஸ்.டியில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

உதாரணமாக : பல விகிதங்கள், மேலும் நமது சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்படவுள்ளன.

ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கோரினோம். பாஜக அதற்கு தயாராக இல்லை. இது ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல, ஆரோக்கியமான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உதவாது.

இன்று வரை, இந்திய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய நாட்களில், 3 சமயங்களில் மட்டுமே நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடியிருக்கிறது. நள்ளிரவில் கூடுவதற்கான மாண்பு அதிலிருந்தே உதிக்கிறது. ஜி.எஸ்.டி அமலாக்கும் நாள், இந்திய விடுதலைப் போராட்டத்தோடு ஒப்பிடத்தகுந்த ஒரு நாள் அல்ல.

இந்த அரசாங்கம் பொதுப் பணத்தை செலவு செய்து ஜாலம் காட்டும் வேலைகளில் ஒன்றாகவே இதைச் செய்கிறது. செய்திகள் ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. நாங்கள் நிகழ்வை புறக்கணிக்கவில்லை, கொரடா உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதேசமயம் ஜி.எஸ்.டியை இப்படி சந்தைப்படுத்துகின்ற போக்கினை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

Check Also

தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம் – டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம் என்றுதோழர் என்.சங்கரய்யா வர்ணிப்பார். அவரோடு இணைந்து பணியாற்றியவர்களும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்களும் இது ...