விழுப்புரம் மாவட்டக்குழு மாநாடு எழுச்சியுடன் துவக்கம்!

விழுப்புரம் டிச. 30 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 21-வது மாநாடு விழுப்புரத்தில் தோழர் என்.வரதராஜன் நினைவரங்கத்தில் 29-ந்தேதி காலை எழுச்சியுடன் துவங்கியது.

சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி மாநாட்டுக் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாநாட்டுத் தலைமைக்குழுவாக வீ.இராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், வே.உமாமகேஸ்வரி, எம்.செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கே.கலியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஜி.துரை வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சிகளிலும் 100 நாட்களுக்கு குறையாமல்  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை அமலாக்க வேண்டும்.

கரும்பு கொள்முதல் விலையை 2014-2015 ஆம் ஆண்டிற்கு ரூ. 4,000 என அறிவிக்க வேண்டும். 2013-2014 ஆண்டிற்கு மாநில அரசு அறிவித்த விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் பாக்கித் தொகை 62 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசுப்போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை மாநாடு ஆதரிக்கும் அதே வேளையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

டிசம்பர் 29,30,31 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இறுதி நாளான 31 தேதி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டு இரயிலடியில் பொதுக்கூட்டம்-கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் த.ஏழுமலை, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

Check Also

சிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் மீது பட்டப்பகலில் உள்ளூர் எதிரிகளுடன் சேர்ந்து கூலிப்படையினரால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...