விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை உடனே நிறுத்திட வலியுறுத்தி!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் காயார் மற்றும் வெண்பேடு கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை உடனே நிறுத்திட வலியுறுத்தி சிபிஐ (எம்) எம்.எல்.ஏ. மின்சார வாரிய தலைவரிடம் மனு;

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், காயார் மற்றும் வெண்பேடு கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படும் 400 கிலோ வாட் சக்தி கொண்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை நிறுத்தி மாற்றுப் பாதையில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் அமைத்திட வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23.6.2015) தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் நேரு, காயார் மற்றும் வெண்பேடு கிராம மக்கள் மற்றும் மின்ஊழியர் மத்தியமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன்  ஆகியோர் உடன் சென்றனர்.

கோரிக்கை மனு

Check Also

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் 23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு ...