விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை விலக்குக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

திரு. கமலஹாசன் கலைத்துறையிலும் தனிப்பட்ட முறையிலும் மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடித்து வருபவர். கடந்த காலத்தில் அவருடைய செயல்பாடுகளே இதற்கான சாட்சியாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் திரைப்பட தணிக்கைத் துறை ஒரு படத்தை தணிக்கை செய்து வெளியிட்டபிறகு அதை தடை செய்வது சரியல்ல என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்ட பூர்வமாகவும் தார்மீக ரீதியிலும் நியாயமானதல்ல.
 
எனவே விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply