வைகோவிற்கு அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

10.06.2017

வைகோவிற்கு அனுமதி மறுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 

மதிமுகவின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் மலேசியா அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பல நாடுகளுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்யக் கூடியவர். ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றியவர். மலேசியாவிற்கு கூட பலமுறை பயணம் செய்திருப்பவர். மலேசிய அரசு கொடுத்த விசாவின் அடிப்படையிலேயே அவர் அந்நாட்டிற்கு சென்றிருக்கிறார். இத்தனைக்கும் அது ஒரு பொது நிகழ்ச்சியல்ல திருமணத்திற்காக சென்றிருக்கிறார். இந்நிலையில் அவரை திருப்பி அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த பிரச்சனையில் உடனடியாக மத்திய அரசாங்கம் தலையிட்டிருக்க வேண்டும். இந்திய அரசு மலேசிய அரசிடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். இப்போதாவது மலேசிய தூதரை அழைத்து மத்திய அரசாங்கம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

சாதி ஆணவப் படுகொலை: நீதிமன்றத் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் டிசம்பர் 12-13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு ...