admin

பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?

கடந்த சில தினங்களாக நாட்டின் பொருளாதாரம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. வெளியாகியிருக்கும் தரவுகள் அனைத்துமே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது, நாட்டின் பொருளாதார மந்தத்தை துரிதப்படுத்தியிருக்கிறது என்றும் நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இட்டுச் செல்லும் என்றும் காட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கத்தையே சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் தொகுதி காட்டியுள்ளது. 2016-17க்கான உண்மையான மதிப்புக்கூட்டல் (real Gross Value Added) வளர்ச்சி விகிதம்6.6 சதவீதமாகும். இது 2015-16 ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக ...

Read More »

கிருஷ்ணசாமியின் சுயநலம் சட்டமன்றத்தின் மேஜை மீது பொத்தென்று விழுந்தது

2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக் கேட்க அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக் கொள்ள… டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் ...

Read More »

தமிழக மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது – சிபிஐ(எம்) இரங்கல்!

தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனை கொடுப்பதாகவும் உள்ளது. நீட் தேர்வு திணிக்கப்பட்டதால்,  மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை இழந்த ஏராளமான எளிய குடும்பங்களுக்கு  இது மேலும் ஒரு துயரச் செய்தியாகும்.  அனிதாவின் இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது இரங்கலை தெரிவிக்கிறது. அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து கல்வி பயின்ற அனிதா, பத்தாம் வகுப்பில்  478 மதிப்பெண்கள் பெற்றார். தன் வீட்டில் கழிப்பிடம் இல்லாத நிலையில், தனியார் பள்ளியொன்றில் ...

Read More »

ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்ப பெறுக தமிழக அரசிற்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் தங்களுடைய அசல் (ஒரிஜினல்) ஓட்டுநர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டுமென்றும், காவல்துறையினர் சோதனையின் போது அசல் உரிமம் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ. 500/- அபராதம் அல்லது 3 மாதம் சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ள பல லட்சம் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும். வாகனம் ஓட்டி பிழைக்கும் தொழிலாளர்கள், வேலைக்கு செல்பவர்கள்,  சொந்தமாக ...

Read More »

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கை – இந்தியா ஒருபோதும் மன்னிக்காது

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கையாகும். இதனை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. 99 சதவீதம் செல்லாப் பணம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வங்கி வரிசையில் நின்று செத்தார்கள். ஏழைகளே இந்த நடவடிக்கையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தனை விலை கொடுத்ததன் பலன் என்ன? வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இழந்து – பொருளாதாரத்திற்கு கடும் விலை கொடுத்து, வேலையிழப்பை எதிர்கொண்டு செய்த தியாகத்தின் பலன்கள் என்ன? … மோடியின் தேசவிரோத நடவடிக்கையை நாடு ஒருநாளும் மன்னிக்காது. – சீத்தாராம் யெச்சூரி

Read More »

‘இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப் போருக்கு தயாராவோம்’

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். சென்னையில் வெள்ளியன்று (ஆக. 25) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரியார் ...

Read More »

தனியுரிமை தொடர்பான தீர்ப்பை சிபிஐ(எம்) வரவேற்கிறது…

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவில் வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் தனியுரிமைக்கான பாதுகாப்பும் உண்டு என்ற தீர்ப்பை – உச்ச நீதிமன்றத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது. கார்பரேட் ஆதிக்கத்தில் தனி நபர் உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதிலிருந்து, பாதுகாப்பை வழங்குவதாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. ஆதார் கட்டாயமாக்குவது பற்றிய பிரச்சனையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்யும் என கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தீர்ப்பை வரவேற்கிறது.

Read More »

வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட ஊழல் வழக்கில் நீதியின் வெற்றி

கேரள உயர்நீதிமன்றம் லாவ்லின் வழக்கில் தெரிவித்துள்ள தீர்ப்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சரி என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. என்என்சி லாவலின் வழக்கில் பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்பது நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாகியுள்ளது. பினராயி விஜயனை, சிபிஐ வேண்டுமென்றே குறிவைத்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களின் பிம்பத்தை சிதைப்பதற்காக லாவ்லின் வழக்கு பயன்படுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு அதனை அம்பலப்படுத்தியுள்ளது.

Read More »

ஜுனைத் குடும்பத்திற்கு நிதியுதவி

தோழர் பிருந்தா காரத் தலைமையிலான குழுவினர் ஜுனைத் வீட்டுக்குச் சென்றனர். ரூ 5 லட்சம் உதவித் தொகையை ஜுனைத் பெற்றோர் ஜலாலுதீன், சைராவிடம் வழங்கினர். கேரள மாநிலக்குழு இந்த நிதியைத் திரட்டியது. ஜுனைத்தின் பெயரால் ஒரு பள்ளியைத் தொடங்க விரும்புவதாக, அவரின் தாயார் சென்ற மாதம் தோழர் பினராயி விஜயனை தில்லியில் சந்தித்தபோது தெரிவித்திருந்தார். நிதி உதவியை குடும்பத்தாரிடம் வழங்கிய தோழர் பிருந்தா காரத், கும்பல் வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடுவோம் என்ற உறுதியை மீண்டும் வழங்கினார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் ...

Read More »

காலுக்கு செருப்புமில்லை! கால்வயிற்று கஞ்சியுமில்லை!

1907 ஆக. 21 நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் ப.ஜீவானந்தம். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் ஜீவா. அப்போது 17 வயது! 1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு ...

Read More »