வடசென்னை மாவட்டக்குழு மாநாட்டின் தீர்மானங்கள்!

சென்னை, டிச.16-

சென்னை அம்பத்தூரில் சிபிஎம் வடசென்னை மாவட்ட மாநாடு டிச.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தோழர்கள் ஆதினமிளகி, எம்.வரதன் அரங்கில் நடைபெற்றது.

தீர்மானங்கள்

சென்னை மாநகரில் சாமான்ய மக்களின் கருத்துகளை உரிமைகளாக இருந்த பொது கூட்டம், தெருமுனை கூட்டம், ஆலைவாயில் கூட்டம் நடத்துவது கோரிக்கை பலகைகள் வைப்பது, ஜனநாயக பூர்வ இயக்கங்கள் நடத்துவது உள்ளிட்ட இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிப்போருக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும், சென்னை பகுதி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,

தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தியதை திரும்ப பெற வேண்டும்,

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்,

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் படி அமலாக்கப்படும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டத்தை தொடர வேண்டும்,

திருவெற்றியூர், பெரம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், ராயபுரம் ரயில் முனையம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எண்ணு துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகத்திற்கு சரக்கு வாகன போக்குவரத்திற்கு கடல் மேம்பாலம் அமைக்க வேண்டும்,

சாலையோர வியாபாரிகள் நலன்களுக்காக டவுன் வென்டிங் கமிட்டியை அமைக்க வேண்டும்,

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமையை பாதுகாக்க தொழிலாளர் நலத்துறை தலையீடு செய்ய வேண்டும்,

தமிழக மீனவர்களின் மீன்பிடி பாரம்பரிய உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்,

சிபிஎஸ்இ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நல்லாட்சி தினம் என்று பன்முக கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்,

தங்க சாலை (மின்ட்) பேருந்து நிலையத்திற்கு மேற்கூரை, கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்து தரவேண்டும்,

சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மாநகராட்சி பள்ளிகளை மூடுவதையும் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு நிர்வாகம் கைவிட வேண்டும்,

மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டத்தையும் எண்ணூர் மணலி சாலை திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்,

சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து ஜனவரி 7ல் ரிப்பன் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

புதிய மாவட்டக்குழு

41 பேர் கொண்ட வடசென்னை மாவட்டக்குழுவிற்கு எல்.சுந்தரராஜ் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். கே.கிருஷ்ணன், செ.சுந்தரராஜ், டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், பி.சந்திரசேகரன், வீரஅருண், இரா.முரளி, கி.ராதை, எம்.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயராமன், , சி.திருவேட்டை, வி.ஜானகிராமன் ஆகிய 13 பேர் மாவட்டசெயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டின் நிறைவாக அம்பத்தூர் ராம்நகரிலிருந்து பேரணி துவங்கி அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் நிறைவடைந்தது.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...