சிபிஎம் திருநெல்வேலி மாவட்ட மாநாடு துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட 21-வது மாநாடு சங்கரன் கோவிலில் ஞாயிறன்று துவங்கியது. கட்சிக் கொடியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.ராஜாங்கம் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் மஹால் வரை பிரதிநிதிகள் ஊர்வலமாகச் சென்றனர். மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, தி.கணபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜகுரு , தங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழு தலைவர் முத்துப் பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். திங்களன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ .சவுந்தரராசன், எம்.எல்.ஏ., மாநாட்டை வாழ்த்திப் பேசுகிறார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது நிறைவுரையாற்றுகிறார். மாநாட்டுப் பேரணி 9ம்தேதி நடைபெறுகிறது.

Check Also

நெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்

இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...