திருநெல்வேலி

முழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக

மே 1 அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழுமையாகவும், சீராகவும் குடிநீர் வழங்க வேண்டுமென்றும், தாமிரபரணி தண்ணீரை கோக் பெப்சி நிறுவனங்களுக்கு வழங்க நிரந்தர தடை விதிக்க கோரியும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் நலன் சார்ந்த கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. மாவட்டம் முழுவதும் பல தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்த போதிலும், போதுமான தண்ணீரோ, ஒப்புக்கொள்ளப்பட்ட தண்ணீரோ வழங்கப்படுவதில்லை. சங்கரன்கோவில் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு ...

Read More »

கூடன்குளத்தில் 3,4வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் துவக்கம் சிபிஐ(எம்) திருநெல்வேலி மாவட்டக்குழு கண்டனம்

கூடன்குளத்தில் 3வது 4வது அணு உலைகள் அமைக்கும் பணி மார்ச்சில் தொடங்கப்பட உள்ளது என அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ரூ 39,746 கோடி செலவில் 3வது, 4வது அணு உலைகள் நிறுவப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணு உலை பூங்காக்களை அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இது மக்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும். இந்தியாவில் 2020க்குள் 40,000 மெகாவாட் திறன் உள்ள அணு உலைகளை ...

Read More »

சிபிஎம் திருநெல்வேலி மாவட்ட மாநாடு துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட 21-வது மாநாடு சங்கரன் கோவிலில் ஞாயிறன்று துவங்கியது. கட்சிக் கொடியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.ராஜாங்கம் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் மஹால் வரை பிரதிநிதிகள் ஊர்வலமாகச் சென்றனர். மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, தி.கணபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜகுரு , தங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழு தலைவர் முத்துப் பாண்டியன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மாநாட்டை ...

Read More »