Group IV தேர்வுக்கான விண்ணப்பத்தை நீட்டிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்.


08-09-2016

பெறுநர்

தலைவர் அவர்கள்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

ப்ரேசர் பிரிட்ஜ் ரோடு,

வ.உ.சி. நகர், பார்க் டவுன்,

சென்னை 600 003.

அன்புடையீர், வணக்கம்.

தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை  நிரப்புவதற்கான (Group IV) அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், விண்ணப்பிப்பவர்களுக்கான கடைசி தேதி இன்றுடன் (08.09.2016) நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த மூன்று நாட்களாகவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். தேர்வாணையத்தின் இணையதளம் முடங்கியது போன்ற நிலை ஏற்பட்டு ஐந்து, ஆறு மணி நேரங்கள் போராடியும் விண்ணப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் திரும்பியிருக்கிறார்கள். இன்று (08.09.2016) காலையிலும் அதே நிலைதான் தொடர்கிறது. மேலும், பாதிக்கப்படுபவர்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.

எனவே, ஆன்லைன் விண்ணப்பம் தவிர வேறு வாய்ப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனவும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் எனவும்   தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்

தங்கள் அன்புள்ள

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

கருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து

நமது தாய்த்திருநாடு 72வது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...