ஐடி துறையில் ஆட்குறைப்பை தடுக்க சிபிஐ(எம்) தீர்மானம்

ஐடி துறையில் ஆட்குறைப்பை தடுக்கவும் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிபிஐ(எம்) தீர்மானம்

தற்போது இந்தியா முழுவதும் தகவல் தொழில் நுட்பத் துறை (IT) மற்றும், தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் துறைகளில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலும் 35 வயதுக்குட்பட்ட பொறியாளர்களே இத்துறையில் பணிபுரிகின்றனர். சமீபத்தில் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்) என்ற  இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம், 25 ஆயிரம் தொழிலாளர்களை வெளியேற்றி 50 ஆயிரம் ஊழியர்கள் புதியதாக எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் விப்ரோ மற்றும் ஐபிஎம் ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்பிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

வேலையை நிரந்தரமற்றதாக மாற்றும், அமர்த்து பின் துரத்து கொள்கை, ஐ.டி துறையில், தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில், ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் தகவல்தொழில் நுட்ப இளைஞர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். இவர்கள் அனைவருக்குமான வேலை வாய்ப்பு கிடைக்காத போது, வேலை வாய்ப்புச் சந்தையில் உள்ள கடும் போட்டியை, கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது அரசே திட்டமிட்டு உருவாக்கும் வேலையின்மை ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் வளாக நேர்கானல்களில், தமிழகத்தின் நூற்றுக்கனக்கான கல்லூரிகளில், பல ஆயிரம் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படுவதற்கு, ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ழஊடு நிறுவனம் வளாக நேரகாணலில் தேர்வு செய்த இளைஞருக்கு, வேலை வாய்ப்பு தராததை, எதிர்த்து முஞகு என்ற அமைப்பு, போராடி சில இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தது பாராட்டுக்குரியது.

கல்லூரி வளாக தேர்வு, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான பெரும் விளம்பரமாக மாறியுள்ளது.  தனியார் கல்லூரிகள் அதிகரித்து, ஏற்பட்டுள்ள போட்டிகளை சமாளிக்க, வளாக நேர்கானல்கள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகளையும், டிசிஎஸ், விப்ரோ, ஐ.பி.எம் ஆகிய நிறுவனங்களின் ஆட்குறைப்பு அறிவிப்புகளைத் தடுக்கவும், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது போன்ற ஆட்குறைப்பும், வேலையின்மையும், சமூகத்தின் பெரும் தீங்கு என்றும், முதலாளித்துவ லாப வெறி காரணமாக அதிகரிக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு குறிப்பிட விரும்புகிறது. இந்த சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், அரசுகள் உறுதியுடன் நிற்பதும், அதற்காக தொழிற்சங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் கூட்டாக செயல்படுவதும் தேவை, என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

அதேபோல் மென்பொருள் உருவாக்கம் என்னும் பணி காரணமாக, மென்பொருள் என்னும் தொழில் நுட்பத்தை உற்பத்தி செய்யக் கூடியவர்களாக, ஐ.டி ஊழியர்கள் உள்ளனர்.  தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் ஐ.டி ஊழியர்களைப் பாதுகாக்கும் சட்ட வசதி உள்ளது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், ஒரு ஊழியர் மீதான வேலை நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததைக் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே இவர்களுக்காக, தொழிற் தகராறு சட்டத்தில், ஐடி ஊழியர் பாதுகாப்பு சட்டம் இயற்றி பிரிவினை உருவாக்குவது அல்லது பிரத்யேகமான சட்டத்தை இயற்றி, இவர்களின் வேலையைப் பாதுகாக்க வேண்டும்.  குறிப்பாக பணி நேரம் வரைமுறை இல்லை. வீட்டில் பணி செய்ய சொல்வதும் நடைபெறுகிறது. ஊதிய உயர்வு பிராஜெக்ட், விடுப்பு, வெளிநாடு பயணம் ஆகியவைகளில் பாரபட்சம் உள்ளது. பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லை, விடுப்பு அனுமதிக்கப்படாமை ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, தனிச்சட்டம் பயனளிப்பதாக அமையும்.

இச்செயல்களின் மூலம் இந்தியாவில் உருவாகியுள்ள இந்த புதிய தலைமுறை மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கவும், ஆட்குறைப்பைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...