என் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;

விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது என்பது ஒரு இருண்ட காலம். தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கான துவக்கம். ஒரு மினி எமர்ஜென்சி அமலில் இருப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

இதைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று நினைப்பவர்கள், கருத்து சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள், எனக்கு சுதந்திரம் இருக்கிறது, அது மதிக்கப்பட வேண்டுமென்று நினைப்பவர்கள் அத்துணை பேரும் இந்த நெடும்பயணத்தில் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும்.

மக்களுடைய மகத்தான எழுச்சிக்கு முன்னால் தமிழக அரசினுடைய மத்திய அரசினுடைய அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நிச்சயமாக தூளாகும். அதனைத் தகர்ப்பதில் உங்களுடைய பங்கை நீங்கள் செலுத்த வேண்டும்.

ஆகஸ்டு 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துவங்குகிற அந்த நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

உ.வாசுகி

மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

Check Also

இரு நூறாண்டாக வாழும் மாமேதை!

மார்க்ஸ் பிறந்து 2௦௦ ஆண்டுகள் ஆனது; அவர் மறைந்து 135 ஆண்டுகள் ஆயிற்று. அவர் மறைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்களையும், ...