NPHH அட்டைகளை PHH அட்டைகளாக மாற்ற கோரி மாதர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.

NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டைகளாக மாற்றக் கேட்டும், ரேஷன் பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்யவும், ரேஷன் திட்டத்தை முடக்க முயலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ரெகுபதி முன்னிலை  வகித்தார். சி.பி.ஐ(எம்) மாவட்ட செயலாளர் என்.முருகேசன் வாழ்த்தி பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் தோழர்.உ.வாசுகி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

Check Also

குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ...