Tag Archives: அஞ்சலி

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 40ம் ஆண்டு விழா மாநாடு உட்பட தமுஎகசவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். தன்னுடைய கவிதைகளில் மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்திய அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

Read More »

அப்துல் கலாம் மறைவுக்கு சிபிஐ(எம்) இரங்கல்!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களுடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சொந்த முயற்சியால் உயர்ந்தவர். அவர் தமிழகத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வி முடித்து சிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தவர். அறிவியல் நாட்டு வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக பயன்பட வேண்டுமென்று கருதியதோடு, அதற்காக அரும்பாடு பட்டவர். மத்திய அரசினுடைய அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய போதும், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அங்கம் வகித்த போதும், அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. எல்லாத்துறைகளிலும் நமது நாடு வளர்ச்சியடைந்த நாடுகளோடு ...

Read More »