Tag Archives: இரண்டாண்டுகள்

மோடியின் ஈராண்டுகள்: வறுமைக்கு என்ன மருந்து?

-சவெரா இருபது கோடிக்கும் மேலான மக்கள் போதுமான உணவின்றி நாள்தோறும் பசி-பட்டினியுடன் படுக்கைக்குச் செல்லும் ஒரு நாட்டில், மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்களும், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் ரத்தச்சோகையுடன் காணப்படுகிற ஒரு நாட்டில், இவற்றைச் சரிசெய்திட எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மோடி அரசாங்கம் மவுனமாக இருக்கிறது என்றால் அது ஒருவகையில் கிரிமினல் நடவடிக்கையே தவிர வேறல்ல.  இவ்வாறு நாட்டு மக்களில் கோடிக்கணக்கானோர் வாழ்வு குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது சொரணையற்று இருக்கின்ற அதே சமயத்தில், தேசியக் கொடிக்கு மதிப்பு அளியுங்கள், தேசிய  கீதத்திற்கும் ...

Read More »

மோடியின் ஈராண்டு: மகளிர், குழந்தைகள் நலன் …

-அதிரா இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்களின் நிலையை சற்றே நினைத்துப் பாருங்கள். தங்கள் கிராமங்களிலிருந்து பல மைல்கள் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் காட்சியைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களில் உள்ள சேரிவாழ் பெண்கள் தங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் லாரிகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பதையும் பார்க்க முடியும். அதேபோன்று எண்ணற்ற பெண்கள் சுள்ளிகள் சேகரிப்பதையும், வயல்களில் வேலை செய்வதையும், கட்டுமானப் பணிகளில் வேலை செய்வதையும், நகரங்களில் உள்ள நடுத்தரக் குடும்பங்களில் வீட்டு வேலைகள் செய்வதையும் பார்க்க முடியும். இவை ...

Read More »

மோடியின் ஈராண்டுகள்: தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள்

நாட்டில் பல நூறு ஆண்டுகளாகவே பாகுபாட்டுக்கு உள்ளாகிய தலித்துகள் மற்றும் பழங்குடியினர், தற்போது மோடி அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக தொடர்ந்து பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் இதுநாள் வரை பட்ஜெட்டுகள் மூலம் அளித்துவந்த ஆதரவும்கூட மோடி ஆட்சியின்கீழ் எப்படியெல்லாம் வெட்கக்கேடான முறையில் வெட்டி சுருக்கப்பட்டுள்ளன என்று கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இத்துடன் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன. 1.பட்ஜெட்டில் தலித் துணைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி தலித்துகளுக்கு மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 16.6 சதவீதம் ...

Read More »