Tag Archives: காவிரி

தமிழகத்தில் 28-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்: சிபிஐ(எம்) ஆதரவு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் இரண்டு தடுப்பணைகளை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்தபோது தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வன்மையாக கண்டித்தன. தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இத்தனைக்கும் பிறகு சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கர்நாடக அரசின் மாநில பட்ஜெட்டில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையில் எந்த ...

Read More »

இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் குழு பாரதப் பிரதமருடன் சந்திப்பு

இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சந்திக்கும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை குறித்தும், மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும் பிரச்சனை குறித்தும் தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., (சிபிஐஎம்), டி.ராஜா எம்.பி., (சிபிஐ) தலைமையில் விவசாயிகள் அமைப்புகளின் குழு திங்களன்று (22.12.2014) புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டது. விவசாயிகள் சங்கங்களின் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் சட்டம் கூறும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சி உட்பட பல நடவடிக்கைகளை ...

Read More »

நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

கர்நாடக அரசே! காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே! நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு! கர்நாடக மாநில அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணைகட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவதுடன் குடிதண்ணீருக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்படும். இம்முடிவை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கர்நாடக ...

Read More »