Tag Archives: Bus Fair Hike

கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும் – அ.சவுந்தரராசன்

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டியிருக்கிறது என்பது உள்ளிட்ட சொத்தையான காரணங்களை முன்வைத்து, வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டண உயர்வை அமலாக்கி, தமிழக மக்களை துயரத்தின் – கொதிப்பின் உச்சத்திற்கு தள்ளியிருக்கிற அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கிறார் சமீபத்தில் நடந்து முடிந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் களநாயகனாக திகழ்ந்தவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன். “தமிழக அரசு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன என்பதை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு தொழிற்சங்கங்களும் எடுத்துரைத்து வந்துள்ளன. ...

Read More »

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறுக – ஜனவரி 22 தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டன இயக்கம்

தமிழக அரசு 55 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தி பேருந்துகளை பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது அதிரடித் தாக்குதலை தொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய பாஜக அரசின் தவறான பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்துப் பிரிவு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.  பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறுவதால் அவ்வப்போது ஏற்படும் விலை உயர்வு மக்களை வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு மக்களின் ...

Read More »