Tag Archives: cpim

தமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க

தமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க சிபிஐ (எம்) 22வது மாநில மாநாடு வலியுறுத்தல் தமிழகம் பல துறைகளிலும் பின்னடைவை சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு வேதனையுடன் சுட்டிக்காட்ட விழைகிறது. முதன்மைத் தொழிலான விவசாயத்தின் உற்பத்தி 2012-13ல் 21.5 சதவிகித சரிவைச் சந்தித்தது. 2016-17ல் வேளாண் உற்பத்தி அதிர்ச்சி கொள்ளத்தக்கத் அளவில் சரிந்தது. முந்தைய ஆண்டான 2015-16ல் உணவு தானிய உற்பத்தி 113.69 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் 2016-17ல் இது 60.32 லட்சம் டன்னாக சரிந்தது. ...

Read More »

8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுராவின் நலுவா நகரில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சின் விபரம்:- பாஜக கூறிவரும் குஜராத் மாடலை அம்மாநில மக்களே நிராகரித்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது 165 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக மூன்று இலக்கத்தைத் தொட முடியாமல் நின்றுவிட்டது. தற்போது பிரதமரே கூட குஜராத் மாடல் பற்றிப் பேசுவதில்லை. பாஜகவின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இடதுசாரிகள்தான் உண்மையான மாற்று. ஏராளமான சாதனைகளை திரிபுராவின் இடது முன்னணி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. எனவே, ...

Read More »

புயலால் பாதித்த மக்களை முதல்வர் சந்திக்காதது அநீதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், “ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களை போர்க்கால அடிப்படையில் மீட்கவும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கி நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வலியுறுத்தியும்” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். 08.12.2017 பெறுநர்: மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. அன்புடையீர்!, வணக்கம். சமீபத்தில் ஏற்பட்ட ஒகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி ...

Read More »

அரசியல் மாற்றும் ஆர்.கே.நகர் தேர்தலும்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தனது சொந்த மேடையிலிருந்து ஆதரிப்பது என்றும், இதன் முக்கியமான நோக்கம் அதிமுகவையும், பாஜகவையும் தோற்கடிப்பதுதான் என்றும், நவம்பர் 30 அன்று கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்தது. இந்த தீர்மானம் கட்சியின் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் சிலரிடம் கவலையையும், சில கூர்மையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்வாங்கிக் கொள்கிறது, மதிக்கிறது. கைப்பாவை அதிமுக – களவெடுக்கும் பாஜக மாநில அதிமுக அரசை பாஜகவின் ஏவல் ஆளாக மாற்றி, ராஜாவை ...

Read More »

தலைவர் 11 தகவல்கள்: என்.சங்கரய்யா

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 96 வயது. 1922 ஜூலை 15ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது! அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் ...

Read More »

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை சிபிஐ(எம்) தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அரசாணை எண் 191.ன்படி மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிநிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையினரும் அடக்குமுறைகளை ஏவி அடாவடித்தனம் செய்து வருவதை  அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், ...

Read More »

வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது – அரசியல் உள்நோக்கமுடையது சிபிஐ(எம்) விமர்சனம்

தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று  காலை முதல் வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்போர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்போர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஆனால் 187 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் ...

Read More »

சிவப்புப் போர் : பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள்

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரின் பிடியில் தள்ளிய – வேலைவாய்ப்புகளை முற்றாக பறித்த – இந்தியப் பொருளாதாரத்தை நொறுக்கிய பணமதிப்பு நீக்கம் எனும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்திய பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள், நாடு முழுவதும் கறுப்பு நாளாக – போராட்டத் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 18 எதிர்க்கட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) ...

Read More »

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகம் முன் கட்சி கொடியை எரித்து ஏபிவிபி அராஜகம் – சிபிஐ(எம்) கண்டனம்

ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படக்கூடிய பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 11 பேர் செவ்வாயன்று (அக்.31) மாலை  6 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. நாடு முழுவதும் வகுப்புவாத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு மக்களை திரட்டி எதிர்த்து வருவதை பொறுத்துக் ...

Read More »

கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சமூக நீதியை ...

Read More »