Tag Archives: Gaja Cyclone

கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் இன்று (03.12.2018) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினர். மேலும், தமிழகம் முழுவதுமிருந்து கட்சி அணிகளிடமிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய ...

Read More »

கஜா புயல் பாதிப்பால் துயருற்றுள்ள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்!

தமிழகத்தில் கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திருச்சி மற்றும் அருகாமை மாவட்டங்களில் உயிர்சேதம், பொருட்சேதம், பயிர்கள், மரங்கள், வீடுகள், கால்நடைகள் என கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் சூறைக்காற்றால் தகர்க்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களின் துயர் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் ...

Read More »

தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்திடும் பணிகளில் கட்சி அணிகள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்!

தமிழ்நாட்டில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடும் பணிகளில் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தங்களை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் கஜா புயல் மிக மோசமான அளவில் நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 50 பேர் இதுவரை இறந்துள்ளார்கள். மாநிலத்தில் சுமார் பத்து மாவட்டங்களில், பொது கட்டமைப்பு வசதி மற்றும் தனியார் உடைமைகள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புயலின் காரணமாக ஒரு ...

Read More »

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில்  நடைபெற்று வருகிறது.  இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ...

Read More »