Tag Archives: GST

ஊறுகாய் பொட்டலங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்திட அருண்ஜெட்லிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்கள், “50 கிராமிற்கு கீழ் உள்ள ஊறுகாய் தயாரிப்புகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி” மாண்புமிகு. மத்திய நிதித்துறை அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். 01.12.2017 50 கிராம் மற்றும் அதற்கு குறைவான ஊறுகாய் பொட்டலங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாட்டில் 50 கிராம் மற்றும் அதற்கும் குறைவான அளவில் ஊறுகாய் பொட்டலங்கள், ஏழைகளுக்காகவும், தேவையானவர்களுக்காகவும் விறக்கப்பட்டு வருகின்றன. ...

Read More »

மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் (05.07.2017) பத்திரிகையாளர் சந்திப்பு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (05.07.2017) பத்திரிகையாளரைச் சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை: ஜூன் 30 – ஜூலை 1  நாடாளுமன்ற நள்ளிரவுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம் ஏழை எளிய மக்களுக்கு நலன் தரும் என்றார். நடைமுறையில் அது ஏழை எளிய நடுத்தர மக்களையும், சிறு குறுந்தொழில் முனைவோர்கள், வணிகர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்திருக்கிறது. உணவகங்களில் உணவுப்பொருட்கள் விலையேறியுள்ளன. ...

Read More »

ரூ.5 கோடி செலவில் #GST- ‘சிறப்பு அமர்வு’ – சந்தைப்படுத்தும் போக்கினை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்

ரூ.5 கோடி செலவில் #GST– ‘சிறப்பு அமர்வு’ – சந்தைப்படுத்தும் போக்கினை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் – தோழர் சீத்தாராம் யெச்சூரி தான் செய்ய வேண்டிய வேலையை அரசு செய்து முடிக்கவில்லை. நாளைய ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு நாட்டு மக்களும் தயாரிப்போடு இல்லை. ஜி.எஸ்.டியில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. உதாரணமாக : பல விகிதங்கள், மேலும் நமது சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்படவுள்ளன. ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கோரினோம். பாஜக அதற்கு தயாராக இல்லை. ...

Read More »

குட்கா விவகாரத்தில் சுகாதரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

குட்கா விவகாரத்தில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குட்கா, பான்மசாலாக்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்தில் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குட்கா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிடிபட்ட குறிப்பேட்டில், ஆண்டிற்கு ரூ.40 கோடி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், காவல் துறை அதிகாரிகள், சுகாதாரதுறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறையினருக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாக ...

Read More »