Tag Archives: hindi imposition

‘இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப் போருக்கு தயாராவோம்’

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். சென்னையில் வெள்ளியன்று (ஆக. 25) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரியார் ...

Read More »

தமிழ்மொழிக்காக அனைவரும் இணைந்து போராடத் தயாராவோம் – என்.சங்கரய்யா

தமிழர் உரிமை மாநாட்டில் என்.சங்கரய்யா பேச்சு:- தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரத்தை வளர்க்க மிகப்பரந்த மேடையில் ஒன்று திரள்வோம் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா கூறினார். தமுஎகச – இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் என்.சங்கரய்யா பேசியது வருமாறு :தியாகி சங்கரலிங்கனார் போராடியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கை வண்டித் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான உலகநாதன். சங்கலிங்கனார் உயிர் நீத்த அன்று, மதுரையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். சங்கரலிங்கனார் தியாகத்தை ...

Read More »

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் 23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொழிப் பிரச்சனை சம்பந்தமாக நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு முன்மொழிந்த திருத்தங்கள். நிலைமையை பரிசீலித்த பிறகு ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக, கலாச்சார வளர்ச்சிக்கும், மொழி ஒரு சாதனமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் அணுகினால் தான் மொழிப் பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என்று ...

Read More »