Tag Archives: kerala flood 2018

வரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்!

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.   நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெள்ள நீர் சூழ்ந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். உதவி பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதே மிகவும் சிரமமான பணியாக உள்ளது.   மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க ...

Read More »

வெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம்! – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு மக்கள் துயர்துடைக்கும் பணியில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள கேரள சகோதர, சகோதரிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நம்முடைய உடனடிக் கடமையாகும். உயிர் இழந்து, வீடுகள், உடமைகள் இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் ...

Read More »