Tag Archives: Kerala

தந்திரியின் சொத்து அல்ல சபரிமலை! – தோழர் பினராயி விஜயன்

பத்தனம்திட்டாவில் நடந்த இடது ஜனநாயக முன்னணி அரசியல் கொள்கை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்வரும், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராயி விஜயன் பேசியதாவது; சபரிமலையில் தந்திரிகளுக்கல்ல, தேவசம் போர்டுக்கே அதிகாரம் உள்ளது. தங்களது இடுப்பில் கட்டியிருக்கும் சாவியின் மேல் அதிகாரம் முழுவதும் உள்ளதாக தப்புக்கணக்கு போட வேண்டாம். சபரிமலை நடை அடைப்பதும் திறப்பதும் தந்திரிகளின் உரிமையல்ல. சபரிமலை தந்திரியின் சொத்தல்ல. சபரிமலை உள்ளிட்ட இதுபோன்ற கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் சொத்துக்களாகும். இதையெல்லாம் தந்திரி புரிந்து கொண்டால் நல்லது. ஆந்திர ...

Read More »

சமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து… சமூக சீர்திருத்த மரபுதான் நமது மகத்தான மரபு… நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டவை. அதனால்தான் “ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்”, என்று விவேகானந்தரால் விமர்சிக்கப்பட்ட கேரளம் மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாக முன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை ...

Read More »

தமிழும் கன்னடமும் பயிற்று மொழியாக தொடரும் – பினராயி விஜயன்

கேரளத்தில் வாழும் தமிழ் மற்றும் கன்னட மக்களின் பிரச்சனைகளை ஆராய கேரள அரசு உறுதி தெரிவித்துள்ளது. மொழிவழி சிறுபான்மையினரின் நலன்களை பாதிக்காத வகையிலேயே மலையாள மொழிச் சட்டம் அமலாக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மலையாளம் தாய் மொழியாக இல்லாத குழந்தைகளுக்கு, மலையாள மொழிப் பாடம் கூடுதலான ஒன்றாகவே இருக்கும். மொழிவழி சிறுபான்மையோர் வசிக்கும் பகுதிகளில் தமிழ் அல்லது கன்னடம் பயிற்று மொழியாக இருக்கும். இடுக்கியிலும், பாலக்காட்டிலும் தமிழ் பேசும் மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காசர்கோட்டில் கன்னடர்கள் வாழ்கின்றனர். மொழிவாரி சிறுபான்மை ...

Read More »

தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து!

கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது. ஊழல், மதவாதம், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக கேரள மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஊழலுக்கு எதிராகவும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காகவும் கடந்த ஐந்தாண்டு காலமாக கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி நடத்திய போராட்டத்தின் வெற்றியாக தேர்தல் தீர்ப்பு அமைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவிற்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் ...

Read More »