Tag Archives: Ockhi Cyclone

ஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்

ஒக்கி புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை ஒரே தவணையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அமைச்சர்கள் ஒருமாத சம்பளத்தை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் இந்த துயரத்தை துடைக்க அனைவரும் நிதிஉதவி செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். காணாமல் போனவர்களை தேடும் பணி கடலில் தொடர்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது: உயிரிழந்தோருக்கு பத்து லட்சம் ரூபாய் அரசும், பத்து லட்சம் ரூபாய் ...

Read More »

ஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள ஒக்கி புயல் பாதிப்புகளுக்குப் போதிய நிவாரண உதவிகளை மத்திய அரசு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தில் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒக்கி புயல்ஒக்கி புயல், கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் சொல்லொண்ணா சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாகவும், சுமார் நூறு ...

Read More »

புயலால் பாதித்த மக்களை முதல்வர் சந்திக்காதது அநீதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், “ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களை போர்க்கால அடிப்படையில் மீட்கவும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கி நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வலியுறுத்தியும்” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். 08.12.2017 பெறுநர்: மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. அன்புடையீர்!, வணக்கம். சமீபத்தில் ஏற்பட்ட ஒகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி ...

Read More »

ஆமைவேகத்தில் அரசு மீட்புப் பணி – ஜி.ராமகிருஷ்ணன்

புயல் வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் குற்றம் சாட்டினார். ஒக்கி புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக் கிழமையன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் என்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், என்.எஸ்.கண்ணன், உஷாபாசி, ஆர்.செல்லசுவாமி, கே.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் விஜயமோகனன் ஆகியோர் சென்றிருந்தனர். ...

Read More »