Tag Archives: Okhi Cyclone

ஒக்கி புயல் – விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தென்தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெய்த கன மழையும், அடித்த ஒக்கி புயலும் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனமழையினாலும், சூறைக்காற்றாலும் 950 மின்கம்பங்கள் சாய்ந்து 7 பேர் பலியானதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீசிய சூறைக்காற்றால் தென்னை, ரப்பர் மரங்கள் சாய்ந்ததோடு, ...

Read More »