Tag Archives: TNSTC workers’ strike

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) நாளை ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு! தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தல்! ஜனவரி 8ல் – தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்கிட வலியுறுத்தியும், பணியில்  உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணத்தை வழங்கிடக் கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஓராண்டுக்கு மேலாக போராடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகாலமாக கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் பட்டுவாடா ...

Read More »

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிந்து 16 மாதங்கள் முடிந்தபிறகும், புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்த அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் அஇஅதிமுக அரசு முன்வராத நிலையில் வேறுவழியின்றி தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக ஆளுங்கட்சியினரையும், சமூகவிரோதிகளையும், காவல்துறையினரையும் பயன்படுத்தி தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்து போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி தொழிலாளர்களை பழிவாங்கும் அராஜக நடவடிக்கைகளை அஇஅதிமுக அரசும், போக்குவரத்து ...

Read More »