Tag Archives: world womens day

மகளிர் தின வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் சமத்துக்காகவும், உரிமைகளுக்காகவும், கண்ணியமான வாழ்க்கைக்காகவும் போராடும் பெண்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. விஷம் போல் ஏறி வரும் விலைவாசியும், அதிர்ச்சியளிக்கும் கொடும் வன்முறைகளும், ஒற்றுமையை சீர்குலைக்கும் மத வெறியும், பிற்போக்குக் கருத்தியலும் பெண்களின் பிரதான எதிரிகளாக உலா வருகின்றன. கும்பல் பாலியல் வல்லுறவு, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், கௌரவக் கொலைகள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் இக்கால கட்டத்தின் கண்டனத்துக்குரிய போக்குகளாக முன்னுக்கு வந்துள்ளன. 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் கவலையளிக்கும் நிலையிலேயே தொடர்கிறது. ...

Read More »