அமெரிக்க தூதரின் எதேச்சதிகாரம் – சிபிஐ(எம்) கண்டனம்!

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான மனித உரிமைகள் குறித்த விசாரணையில் அமெரிக்காவின் நிலைபாடு குறித்து சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முறையிடச் சென்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.வைகோ அவர்களை துணைத்தூதர் சந்திக்க மறுத்துள்ளார். சந்திப்பதற்கு முன்கூட்டியே நேரம் ஒதுக்கிவிட்டு, சந்திக்க மறுத்து அலட்சியம் காட்டியிருக்கிறார். அரசியல் ஆலோசகர் ஒருவர் அந்த மனுவை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் செயல்படும் தூதரக அதிகாரி ஒருவர் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரை முன்னர் ஏற்றுக் கொண்டதற்கு மாறாக சந்திக்க மறுத்திருப்பது அத்தூதரின் எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. தூதரின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...