அமைதி காக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

தென் மாவட்டங்கள் சிலவற்றில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் கொலைகள், வன்முறைகள், பதற்றம் ஆகியவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. இத்தகைய வன்முறை நாகரீக சமூகத்திற்கு பொருத்தமற்றது, காட்டுமிராண்டித்தனமானது.

இக்கொலைகளையொட்டியும், அதற்கு முன்னரும் நடைபெற்றுள்ள வன்முறைகளால் இம்மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் மற்றும் வன்முறையாளர்களின் சதிக்கு இரையாக வேண்டாம் என மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஆத்திர மூட்டல்களுக்கு இடம் கொடுக்காமல், சமூக பதற்றத்தை தணிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் மக்களை வேண்டிக் கொள்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், பதற்றத்தைத் தணிக்கவும் தகுந்த கண்காணிப்பும், உரிய தலையீடுகளும் செய்ய வேண்டுமெனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply