அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரித்திட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் அறைகூவல்

அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரித்திடுமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக்,பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலர், மனோஜ் பட்டாச்சார்யா,ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 14 அன்றுமாலை 5 மணியளவில், சமூக முடக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரிக்குமாறு நாட்டு மக்களை அறைகூவி அழைக்கிறோம். அந்தச் சமயத்தில் கீழ்க்கண்ட உறுதிமொழிகளைஎடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

1.   நம் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திடுவோம்

2.   சமூக முடக்கத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும், ரொக்க மாற்றம் மற்றும் உணவு விநியோகத்தை உடனடியாகச் செய்திட வேண்டும்.

3.   நம் மக்களிடையே, மத வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி அல்லதுஊனத்தைக் காரணம் காட்டாது அனைத்து மக்களின் சமூக ஒற்றுமைக்கான பிணைப்பை வலுப்படுத்திட வேண்டும். சமூக முடக்கத்தின் காலத்தில் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்றபெயரில், மக்களின் வாழ்க்கை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மீது தீண்டாமையை வெளிப்படுத்தும் விதத்தில் எவ்விதமான தாக்குதலையும் தொடுக்கக் கூடாது. எங்கள் அறைகூவல், “சமூக ஒருமைப்பாட்டுடன் உடல் அளவில் தூரத்தை அனுசரிக்க வேண்டும்” என்பதேயொழிய, “சமூக தொலைவு”அல்ல.

4.   அம்பேத்கரின் அறிவுரைக்கிணங்க, மக்களைப் பயிற்றுவிக்க பழைமைவாதம், மூடநம்பிக்கைகள்,மற்றும் தப்பெண்ணங்களுக்கு எதிராக மக்களைப் பயிற்றுவித்திடவும் உறுதி ஏற்போம். சமூகமுடக்கத்தின் காலத்தில் தங்கள் உயிர்வாழ்வதற்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தாமாகவே முன்சென்று ஆதரவு மற்றும் உதவி அளித்திடவும் உறுதிஎடுத்துக்கொள்வோம்.அன்றைய தினம் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காகக் கூடுவது சாத்தியமில்லை யாதலால்,14 அன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பாகவும், வசதியாகவும் எங்கே இருக்க முடியுமோ அங்கேயேமக்கள் இந்த  உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...