அயோத்தி: நீதிமன்ற நடவடிக்கைகளை நிலைகுலைவிக்காதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களும், மத்திய பாஜக அரசாங்கத்தில் அங்கம் வகித்திடும் அமைச்சர்களும், 1992 இல் பாபர் மசூதியைத் தகர்த்து, நாடு முழுதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தியது போன்று ஒரு நிலைமையை உருவாக்கக்கூடிய விதத்தில்  அச்சம் தரத்தக்க வகையில் தற்போது அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றம் 1994 இல் அளித்திட்ட தீர்ப்பு ஒன்றில், பாபர் மசூதி தகர்ப்பு “ஒரு தேசிய அவமானம்” என்று கூறியிருப்பதுடன், “அங்கே தகர்க்கப்பட்டது, ஒரு புரதான சின்னம் மட்டுமல்ல, சிறுபான்மையினத்தவரின் நம்பிக்கையுமாகும்,” என்றும், “அது நாட்டின் சட்டத்தின் ஆட்சி மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையையும் மற்றும் அரசமைப்புச்சட்ட நடைமுறைகளையும் கூட ஆட்டம் காண வைத்திருக்கிறது,” என்றும் குறிப்பிட்டிருந்தது.

பாஜக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் இப்போது பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், தன்னுடைய நிலையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படும் அக்கட்சியின் தலைவர்கள், தற்போது ராமர் கோவில் கட்டுவதற்காக புதிய சட்டத்தையே உருவாக்க வேண்டும் என்று வெறித்தனமான முறையில் கோரிக் கொண்டிருக்கிறார்கள். இது உச்சநீதிமன்றத்தின் நடைமுறையை நிலைகுலைவிக்கும் செயலாகும்.

அயோத்தி பிரச்சனையின் மீது மக்கள் மத்தியில், ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, அதன்மூலம் நாடு முழுதும் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் திட்டமிட்டுள்ளன. இது ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திடும். தேர்தல் வருவதையொட்டி, மதவெறித் தீயைக் கிளப்பி அதன்மூலமாக தங்களுடைய இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்திட அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியானது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆபத்துக்களைக் கொண்டு வந்திடும். மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துள்ளதால் விரக்தியடைந்துள்ள மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விதத்தில், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் இத்தகு இழி முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

நாட்டின் ஒற்றுமையையும் நாட்டு மக்கள் மத்தியில் இருந்துவரும் சமூக ஒற்றுமையையும் அழித்திட முயற்சிகள் மேற்கொள்ளும் மதவெறி சக்திகளை ஊட்டி வளர்ப்பதை மத்திய பாஜக அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மாநில அரசாங்கமும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்திட தன்னுடைய பொறுப்புகளை நேர்மையான நிறைவேற்றிட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.”

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...