அரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய பாஜக அரசு அதிரடியாக  குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.  அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.

இதன் மூலம் இந்திய மக்களை மத அடிப்படையில் கூறு போடும் பேராபத்தினை உருவாக்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்பேராபத்தினை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநிலச் செயலாளர்) தலைமை ஏற்கிறார். எல்.சுந்தர்ராஜன் (வடசென்னை மாவட்ட செயலாளர்), ஏ.பாக்கியம் (தென்சென்னை மாவட்டசெயலாளர்), ஜி.செல்வா (மத்திய சென்னை மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., (திமுக அமைப்புச் செயலாளர்), கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் மாநிலத் தலைவர்), ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்),  வைகோ, எம்.பி., (மதிமுக பொதுச்செயலாளர்), இரா.முத்தரசன் (சிபிஐ மாநிலச் செயலாளர்), தொல். திருமாவளவன் எம்.பி., (விசிக தலைவர்), கே.எம்.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), பேரா.காதர் மொய்தீன் (முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர்), என்.ராம் (தலைவர், இந்து குழுமம்), என்.ஜி.ஆர். பிரசாத் (மூத்த வழக்கறிஞர்), ஜென்.ராம் (ஊடகவியலாளர்), பேரா.அ. மார்க்ஸ், நக்கீரன் கோபால், இரா. ஜவஹர், ஆர்.வைகை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இடம்: விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம்
நாள் : 16-12-2019 மாலை 4 மணிக்கு

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...