அரசியல் தீர்மானத்தின் இரண்டாம் பகுதி, 20-வது அகில இந்திய மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

20வது அகில இந்திய மாநாடு

அரசியல் தீர்மானம்

(2012 ஏப்ரல் 4-9 கோழிக்கோட்டில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டியல் நிறைவேற்றப்பட்டது)

 முதல் பகுதியின் தொடர்ச்சி 

அரசியல் நிலைமை

காங்கிரஸ்
 
2.116 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனினும் இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மை பலத்தை அடைந்தது. பெருமுதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பிரதானப் பகுதியினர் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்ததும் காங்கிரசிற்கு பலனளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. சிறுபான்மையினர், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களிடையே காங்கிரசிற்கு பெரும் ஆதரவு இருந்தது.
 
2.117 மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பெருமளவு ஊழல்கள் அம்பலமானதால் நடுத்தரவர்க்கத்தின் பெரும்பகுதியினரிடமிருந்து காங்கிர தனிமைப்பட்டுள்ளது. வேலையின்மை வளர்ந்ததால் பெரும்பகுதி இளைஞர்களின் மாயை கலைந்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை மேலும் கூடுதலாக அமல்படுத்த அரசு தவறி விட்டதாக பெருமுதலாளிகளின் ஒரு பகுதியினர் தங்களது அதிருப்திக் குரலை வெளிப்படை யாகவே ஒலித்துள்ளனர். மதசார்பற்ற மாற்று இல்லாத நிலையில் பல இடங்களில் முலிம் சமூகத்தினர் இன்னமும் காங்கிரசை ஆதரிக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி யுள்ளதன் ஆதாயத்தையும் காங்கிர அனுபவிக்கிறது. கடுமையாக உயரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறியுள்ளதால் காங்கிரஎதிர்மறையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதுதவிர உயர்மட்ட ஊழல் காங்கிரசின் செல்வாக்கை கீழ்மட்டத்திற்கு இறக்கியுள்ளது. 
 
2.118 இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு நவீன தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கிறது. மக்கள வையில் நூலிழை அளவே பெரும்பான்மை இருந்த காரணத் தினால் சில தருணங்களில் காங்கிர கட்சியினால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. காங்கிரசை ஆதரித்த கட்சிகளின் ஆதரவைப் பெற ஒவ்வொரு முறையும் சாகச முயற்சிகள் மற்றும் ஆதாய உடன்பாடுகளின் மூலமாக ஆதரவைத் தக்க வைக்க முடிந்தது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையை சமூக நலத்திட்டங்கள் மூலம் மூடி மறைக்க காங்கிர கட்சி முயல்கிறது. இந்தப் பின்னணியில் உணவு பாதுகாப்பு மசோதா போன்ற முக்கியமான சமூக நலத் திட்டங்களை அவசர கோலத்தில் கொண்டுவர அக்கட்சி முயன்றது. சாமானிய மக்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்ள சில நீர்த்துப் போன முயற்சிகளை காங்கிர கட்சி மேற்கொள்கிறது. ஆனால், நவீன தாராளமயமாக்கலின் ஒட்டுமொத்த கட்டமைப்பால் இந்த முயற்சிகளும் கூட கட்டுப்படுத்தப்படுகின்றன. 
 
2.119 உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிர கட்சி தனது தளம் மற்றும் செல்வாக்கை மீட்க முயல்கிறது. ஆனால்,  அதில் வெற்றி பெறவில்லை. பீகாரில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. அண்மையில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய முன்னேற்றம் எதையும் அடைய வில்லை. ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டியால் காங் கிர கட்சி பிளவுபடுத்தப்பட்டதால் அக்கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மிக மோசமாகத் தோற்றுப் போனதால் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி பலவீனமடைந் துள்ளது. மற்றொரு முக்கியக் கூட்டாளியான திரிணாமுல் காங்கிர மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு பல்வேறு விஷயங்களில் தனது வேறுபட்ட சந்தர்ப்பவாத நிலையினை வலியுறுத்த துவங்கியுள்ளது.
 
பாஜக
 
2.120 2009 தேர்தல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாஜக விற்குள் கோஷ்டி மோதல் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைமையில் ஏற்பட்ட நெருக்கடியின்போது ஆர்எஎ தலையிட்டதன் மூலம் அக்கட்சி மீதான ஆர்எஎ இயக்கத்தின் பிடி மீண்டும் ஒருமுறை அம்பலமானது. இப்போதும்கூட பல்வேறு கோஷ்டிகள் மோதிக்கொண்டு தான் உள்ளன. ஊழலுக்கெதிரான ரத யாத்திரை எல்.கே. அத்வானியை முன்னிறுத்தியது சமீபத்திய உதாரணமாகும். தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டபோதும், குஜராத், ராஜதான், மத்தியப்பிரதேசம், சத்தீகர், கர்நாடகம், இமாசலப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் அதன் ஆதரவுத் தளம் ஏறத்தாழ அப்படியே உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பா அரசிற்கும் சுரங்க மாபியா கும்பலுக்கும் இடையிலான நெருக்கம் வெளியானதைத் தொடர்ந்து அதன் செல்வாக்கு சிதைந்துள்ளது. எடியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதன் மூலம் அதன் செல்வாக்க மேலும் வீழ்ந்தது. எனினும் ஊழல் பிரச்சனையில் காங்கிரசுக்கு எதிரான மனநிலை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினரிடம் காணப்படுவதால் பாஜக ஆதாய மடைகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற இடங்கள் மற்றும் மக்களில் ஒரு பகுதியினரிடையே வளர்ந்து வரும் காங்கிரசுக்கெதிரான உணர்வு ஆகியவற்றால் அது தார்மீகரீதியாக ஊக்கம் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் புதிய கட்சிகளை இழுக்க முயல்கிறது.
 
2.121 ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில் மதவெறி நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி அயோத்தியில் கோவில் கட்டுவது அல்லது இலாமிய பயங்கரவாதம் போன்ற பிரச்சார முயற்சிகளுக்கு போதுமான ஆதரவு கிடைக்க வில்லை. காங்கிர கட்சியின் பொருளாதாரக் கொள்கை களில் பாஜகவிற்கு அடிப்படையான வேறுபாடுகள் எதுவும் இல்லையென்ற போதிலும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, அரசுக்கு சிக்கலை உரு வாக்கும் நோக்கத்துடன் அரசின் சில கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிர்த்தது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையைச் செயல்படுத்துவதில் பாஜகவும் உறுதியாக உள்ளது; மேலும் இது ஒரு வகுப்புவாத கட்சி மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் வலதுசாரி மாற்றும் ஆகும்.
 
பிராந்தியக் கட்சிகள்
 
2.122 பெரும்பாலான பிராந்தியக் கட்சிகள் பிராந்திய முத லாளிகள், கிமப்ப்புற பணக்காரர்கள் நலனையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. காங்கிர மற்றும் பாஜக குறித்த அணுகு முறையில் இந்தக்கட்சிகள் சந்தர்ப்பவாத நிலைபாட்டை மேற்கொள்வதாகவே உள்ளன. அரசு பொறுப்பில் இருக்கும் பொழுது அவைகள் நவீன  தாராளமயக் கொள்கைகளை கடைபிக்கின்றன. மத்தியில் கூட்டணி அரசு என்பது ஒரு கோட்பாடாக உருவாகி விட்ட நிலையில், காங்கிர அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி அரசுகளில் இணையும் வாய்ப்பை இந்தக் கட்சிகள் மாநிலத்தில் தங்களது நலனுக் கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களது கூட்டணியைப் பலப்படுத்திக் கொள்ளவும், மத்தியில் அரசு அமைக்கவும் காங்கிர மற்றும் பாஜக சில பிராந்தியக் கட்சிகளோடு கூட்டுச்சேர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளன. 
 
2.123 இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் தலைமையில் இரு கட்சி அல்லது இரு முன்னணி அமைப்பையே ஆளும் வர்க்கங்கள் எப்போதும் விரும்புகின்றன. எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் பெரு முதலாளிகளின் நலனுக்கேற்பவே செயல்படுவார்கள் என்பது உறுதியாகி விடுகிறது. இத்தகைய இரு கூட்டணிகள் மட்டும் உருவாவதைத் தடுக்கும் திசை வழியிலேயே நம்முடைய முயற்சிகள் அமைய வேண்டும். காங்கிர மற்றும் பாஜகவுடன் சேராத பிராந்தியக் கட்சிகளுடன் உறவை வளர்த்து பராமரிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் மத்திய-மாநில உறவுகளை பாதுகாப்பதற்கான கூட்டுப் போராட்டங்கள் மூலமாகவே இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகும்.
 
2.124 இந்தக் கட்சிகளுக்கிடையே ஊசலாட்டம் இருந்தபோதும் காங்கிர அல்லாத மதசார்பற்ற கட்சிகளுடன் நாடாளு மன்றத்தில் அவ்வப்போது முன்னுக்கு வரும் பிரச்சனைகளில் ஒத்துழைப்பது என்ற அடிப்படையில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் பிரச்சனைகளில் ஒன்றுபட்ட கூட்டு இயக்கத்தைப் பலப்படுத்தி பரவலாக்க வேண்டும்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள்
 
2.125 19வது அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது இருந்த நிலையோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் நிலைமையில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு 19வது அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது, மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் 2006ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இடதுசாரிகள் வலிமையாக உருவெடுத்திருந்தனர். திரிபுராவிலும் 2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக தொடர்ந்து இடது முன்னணி வெற்றி பெற்றது. எனினும் 2009 மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி கடுமையான பாதிப்பைச் சந்தித்து இதுவரை இல்லாத அளவிற்குக் குறைவான இடங்களையே பெற்றது. 2011ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 1977-க்குப் பிறகு முதன்முறையாக இடது முன்னணி தோல்வியடைந்தது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
2.126 இந்த தேர்தல் தோல்வியாலும் மற்ற மாநிலங்களில் கட்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றத்தை அடையாததாலும், தேசிய அளவில் கட்சி மற்றும் இடதுசாரிகளின் நிலை பலவீனமடைந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதோடு வகுப்புவாத சக்திகளும் ஆதாயம் பெற முயல் கின்றன. எனவே மார்க்சிட் கம்யூ னிட் கட்சியை வலிமைப்படுத்து வதும், இடதுசாரிகள் இழந்த தளத்தை மீட்பதும் மிக முக்கியமானதாகும்.
 
இடதுசாரிகள் தலைமையிலான அரசுகள்
 
2..127 1977-க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன் முறையாக இடது முன்னணி தோல்வியடைந்தது. இடதுமுன்னணி தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இடது முன்னணியின் தோல்வி நாடு முழுவதும் உள்ள இடது மற்றும் ஜனநாயக இயக்கங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இடது முன்னணி அரசின் சாதனைகளை மறைத்துவிட முடியாது. நிலச்சீர்திருத்த அமலாக்கம், பஞ்சாயத்து அமைப்புகளை ஜனநாயகப்படுத்தியது மற்றும் அதிகாரப்பரவல், உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது, மத நல்லிணக்கத்தைப் பேணியது, மதச்சார்பற்ற மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்தது என்பது அந்தச் சாதனைகளில் சிலவாகும். இவையனைத்தும் திரிணாமுல் காங்கிர தலைமையிலான ஆட்சியில் தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளன. நிலச் சீர்திருத்தத்தை சீர் குலைப்பது விவசாயிகளின் நிலத்தை பறிப்பது போன்றவை நடந்து வருகின்றன. பஞ்சாயத்து முறை சீரழிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் இடத்தில் அதிகார வர்க்கம் அமர்த்தப்படுகிறது. உழைக்கும் மக்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் மீது பரவலான தாக்குதல்கள் நடைபெறுவதோடு ஜனநாயக உரிமைகளும் மீறப்படுகின்றன.
 
2.128 மக்களைத் திரட்டி இந்தத் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும்; நிலச் சீர்திருத்தத்தின் மூலம் பெற்ற பலன்களைப் பாதுகாக்க வேண்டும்; அடிப்படை வர்க்கங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களைக் கட்ட வேண்டும்; அனுபவத்திலிருந்து பாடம் கற்று அரசியல்ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் ஏற்பட்ட பலவீனங்களைக் களைந்து முன்னேற வேண்டும். நம்மிடமிருந்து தனிமைப்பட்ட மக்களுடனான உறவை புதுப்பிக்க வேண்டும்.
 
2.129 கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடது ஜனநாயக முன்னணியை விட 1 சதவீதம் மட்டுமே வாக்குகளைக் கூடுத லாகப் பெற்று பெரும் பான்மை பெற 3 இடங்கள் தேவை என்ற குறுகிய இடைவெளியிலேயே வெற்றி பெற்றது. எனவே, இடது ஜனநாயக முன்னணி அரசின் கொள்கைகள் நிராகரிக் கப்பட்டதாக கருத முடியாது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூஸ்னிட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி யையே உழைக்கும் மக்கள் கணிசமான அளவு ஆதரித்துள்ளனர்.
 
2.130 இந்த இரு மாநிலங்களிலும் மக்களின் ஆதரவைப் பெறு வதற்கு கட்சி முனைப்புடன் செயல்படும்.
 
திரிபுரா அரசைப் பாதுகாப்போம்
 
2.131 திரிபுரா இடது முன்னணி அரசு மக்களுக்கு சேவை செய் வதில் மகத்தான சாதனையைச் செய்துள்ளது. ஊழலற்ற அரசு என்பதற்கு உதாரணமாக இது திகழ்கிறது. வறுமையைக் குறைப்பதிலும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கு வதிலும் ஆதிவாசி மக்கள் நல வாழ்விலும், ஆதிவாசி மக்கள் மற்றும் ஆதிவாசி அல்லாத மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் இடது முன்னணி அரசு உன்னதமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. காங்கிர மற்றும் இதர வலதுசாரி சக்திகளின் தாக்குதல் இலக்காக இடது முன்னணி அரசு உள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ள நிலையில் திரிபுராவில் தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். கட்சி மற்றும் நாடு முழுவதும் உள்ள இடதுசாரி சக்திகள் திரிபுரா இடது முன்னணி அரசைப் பாதுகாக்க வேண்டும். மேலும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
 
வன்முறைக்கு முடிவு கட்டுக!
 
மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
 
2.132 மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. 2009 மே மாதத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சி ஊழியர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் தொடர்ச்சியான தாக்குதல் நடைபெற்றது. 2011ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தலுக்குப் பிறகு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் குறிவைத்து கொலை செய்வது, திரிணாமுல் காங்கிர தலைமையினால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்செயல்கள் என்பதாக இந்தத் தாக்குதல்களின் தன்மை உள்ளது. 2009 மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த பயங்கரவாத நிகழ்வுகளால் கட்சியின் 19வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 550 தோழர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இவர்களில் 59 தோழர்கள் 2011ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கொல்லப்பட்டவர்கள் ஆவர். பல இடங்களில் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அலுவலகங்கள் நூற்றுக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளன அல்லது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கானவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட் டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் தாக்கு தலுக்கு காவல்துறையினரும் துணையாக உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டு பணி செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றனர். கட்சியைப் பலவீனப்படுத்தவும், வெகுஜன தளத்தைத் தகர்க்கவும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் தாக்குதலாகும் இது. 
 
2.133 மேற்கு வங்கத்தில் கட்சியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஒட்டுமொத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதே தொடுக்கப்படும் தாக்குதலாகும். ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் ஆகும். ஒட்டு மொத்தக் கட்சியும் அணிதிரண்டு மேற்குவங்கக் கட்சியைப் பாதுகாக்க துணைநிற்க வேண்டும். இத்தகைய தாக்குதல் களை அம்பலப்படுத்திக் கண்டிக்கும் வகையில் மக்கள் கருத்தைத் திரட்டுவதும் அனைத்து ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதும் கட்சியின் முன்னுள்ள உடனடிக் கடமையாகும். திரிணாமுல் காங்கிரசின் இத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், மாநில அரசு அமைதியான சூழலை உருவாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் ஜனநாயக ரீதியிலான கருத்தை உருவாக்க வேண்டும்.
 
கூட்டு இயக்கங்களைத் தீவிரப்படுத்துக
 
2.134 அகில இந்திய அளவில் ஒன்றுபட்ட இடதுசாரி கட்சிகளின் போராட்டங்களை வளர்த்தெடுக்கவும், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டு இயக்கத்தை உருவாக்கவும் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இடதுசாரி கட்சிகள் பல்வேறு கூட்டுப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளன. விலைவாசி உயர்வு பிரச்சனையை எதிர்ப்பதில் பெருமளவு முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. 2010ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தில்லியில் இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பேரணியின் அறைகூவலுக்கேற்ப ஏப்ரல் 8ம் தேதி இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நடத்திய மறியல் மற்றும் சிறைநிரப்பும் போராட்டங்களில் 20 லட்சம் மக்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 13 கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப ஏப்ரல் 27ம் தேதி நடைபெற்ற ஹர்த்தால் போராடடமும் வெற்றி பெற்றது. பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்வை எதிர்த்து இடது மற்றும் மதசார்பற்ற எதிர்க் கட்சிகள் ஜூலை 5ம்தேதி மீண்டும் ஹர்த்தால் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதேநாளில் பந்த் போராட் டத்திற்கு அழைப்பு விடுத்ததால் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப் பெரும் எதிர்ப்பு இயக்கமாக அது அமைந்தது.
 
2.135 மத்திய அளவிலான அனைத்து தொழிற்சங்கங்ளும் இணைந்து கூட்டுமேடை அமைத்தது மிக முக்கியமான வளர்ச்சிப் போக்காகும். பிஎம்எ தவிர்த்த ஏனைய மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக் கேற்ப 2010 செப்டம்பர் 7ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. ஐஎன்டியுசி, பிஎம்எ உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இதில் பங்கேற்றன. இந்த மறியலில் 7.5 லட்சம் தொழி லாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றதாக மதிப்பிடப் பட்டது. 2012ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. ஐஎன்டியுசி மற்றும் பிஎம்எ உள்பட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் இணைந்து நடத்தும் முதல் வேலை நிறுத்தமாகும் இது. நாட்டின் உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டுமேடை உருவாக்கப்பட்டுள்ளது ஒரு மைல் கல்லாகும். உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர், வெகுஜன அமைப்புகள் ஒன்றுபட்டு போராடுவதை இது ஊக்கப்படுத்தும்.
 
2.136 நவீன தாராள மயமாக்கல் கொள்கையை முறியடிப்பதற்கு இப்போது எழுந்துள்ள இயக்கம் போதுமானதல்ல. மேலும் மிகப் பரந்த அளவிலான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நிலம் மற்றும் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பான பிரச்சனைகள், உணவு, வேலை வாய்ப்பு, பணி நிரந்தரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாது காப்பதற்கு பரந்துபட்ட வெகுஜன இயக்கங்கள் அவசிய மாகிறது. கூட்டு இயக்கங்களைத் துவக்கி நடத்துவதன் மூலம் நமக்கு வெளியே உள்ள மக்களையும் பெருமளவு ஈர்க்க முடியும்.
 
கட்சியின் அரசியல் நிலைபாடு
 
2.137 காங்கிரசையும், பாஜகவையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகப் போராடும். தொடர்ச்சியான வர்க்கச் சுரண்டலுக்கும், பல்வேறு பகுதி மக்களை சமூகரீதி யாக ஒடுக்குவதற்கும் காரணமாக உள்ள பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ முறைமையையே இந்த இரு கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்தக் கட்சிகள் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதோடு அமெரிக்க ஆதரவு வெளியுறவுக் கொள்கையையும் முன்னிறுத்துகின்றன. ஒருபுறத்தில் விலைவாசி உயர்வின் மூலமாக மக்கள் தலையில் சுமையை ஏற்றப்படுதல், வேலை யின்மை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயரங் களுக்குக் காரணமாகவும் மறுபுறத்தில் அளவிட முடியாத ஊழல் மற்றும் பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்ளுக்கு ஆதரவாக உள்ளதாலும் காங்கிர தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டாயமாகும். பாஜகவைத் தனிமைப் படுத்துவதும், அதன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதும், இடது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முன்னேற்றத்திற்கு அவசியமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
 
2.138 காங்கிர மற்றும் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது ஜனநாயக மாற்றை முன்வைக்கிறது. இடது ஜனநாயக மேடையே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஒரே மாற்றாக இருக்க முடியும். இயக்கங்கள் மற்றும் போராட்டங்களைக் கட்டமைப்பது மற்றும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளிடையேயான அரசியல் கூட்டணியும் இந்த மாற்றை உருவாக்க அவசியமாகும். ஜனநாயகம், நாட்டின் இறையாண்மை, மதசார்பின்மை, கூட்டாட்சி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட, காங்கிர அல்லாத பாஜக அல்லாத கட்சிகளை அணிதிரட்டுவது இத்தகைய மாற்றை உருவாக்கும் முயற்சிக்கு அவசியமாகும். இத்தகைய கூட்டுமேடை உருவாவது இடது மற்றும் ஜனநாயக சக்தி களின் கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு உதவும்.
 
2.139 இப்போதுள்ள சூழ்நிலையில் காங்கிர அல்லாத மதச் சார்பற்ற கட்சிகளுடன் கூட்டு இயக்கங்களுக்கு நாம் முயற்சி யெடுக்க வேண்டும் அப்போது தான் இயக்கம் பரவலாகும். குறிப்பிட்ட கொள்கைப் பிரச்சனைகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்திலும் இந்தக் கட்சி களின் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் இக்கட்சிகள் சிலவற்றுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ளலாம்.
 
சுயேச்சையான நடவடிக்கையை வலுப்படுத்துவோம்
 
2.140 இன்றைய சூழ்நிலை என்பது, இடதுசாரிகள் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், கட்சியின் வலுவான தளமான மேற்குவங்கத்தில் கட்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் உள்ளது. எனவே மற்ற மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கு மற்றும் தளத்தை விரிவுபடுத்துவதை அதிமுக்கியமான பணியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை நிறைவேற்ற கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும், விரிவுபடுத்துவதும் அத்தியாவசியமானது ஆகும். கட்சியை முன்னெடுத்துச் செல்ல இதுவே திறவுகோலாகும். வெகுஜன மக்களை செயலூக்கப் படுத்தவும், இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் இணை வதற்கு மக்களது உணர்வு மட்டத்தை உயரத்திற்குக் கொண்டு செல்லவும் அரசியல், பொருளாதார  மற்றும் சமூகப் பிரச் சனைகளில் கட்சியின் சுயேச்சையான நடவடிக்கை அவசிய மானதாகும். பரந்துபட்ட இயக்கங்களின் மூலம் மக்களை அணிதிரட்ட, வெகுஜன அமைப்புகள் சுயேச்சையான அமைப்புகளாக செயல்பட்டு மக்களை அணிதிரட்டுவதும், அமைப்பு ரீதியாக உருவாக்குவதும் அவசியமாகும்.
 
2.141 நமது வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அரசியல் தத்துவார்த்தப் பணி வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைத்து முக்கிய பிரச்சனை களிலும் கட்சியின் அரசியல் ரீதியான தலையீடு இருக்க வேண்டும். இனிவரும் நாட்களில் சுயேச்சையான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், அரசியல் தளத்தைச் சுற்றி வெகுஜன மக்களைத் திரட்டவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகளிடமிருந்து கட்சியை இனம் பிரித்துக்காட்ட இது உதவும். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அதன் அரசியலை சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்சி முறியடிக்க வேண்டும். புதிய பகுதிகளுக்கும், புதிய பிரிவுகளுக்கும் கட்சியின் அரசியல் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட வேண்டும். தேர்தல் பங்கேற்பு மற்றும் நாடாளுமன்ற அரங்க செயல்பாடு என்பது வெகுஜன இயக்கங்களை வளர்ப்பது மற்றும் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவது ஆகிய பணிகளோடு சரியான முறையில் பொருத்தப்பட வேண்டும்.
 
2.142 அடிப்படை வர்க்கங்களின் மத்தியில் கட்சிப் பணிக்கு முன் னுரிமை அளிக்கப்பட வேண்டும். விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்களிடையே பணியாற்றுவதிலும், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளைக் கட்டுவதிலும் உள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டும். உற்பத்தி மற்றும் கேந்திர தொழிற்சாலைகளில் பணியாற்றும் முறைசார் தொழிலாளர்களிடையே கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும். முறைசாராத் தொழிலாளர்களை அணி திரட்டுவதற்கும், அவர்களிடையே அரசியல் பணியாற்றுவதற்கும் முக்கியத் துவம் அளிக்கப்பட வேண்டும், தொழிலாளி – விவசாயி கூட்டணியினை உருவாக்கி வளர்ப்பதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். 2.143 தலித்துகள், சிறுபான்மையோர் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரத்யேக பிரச்சனைகளை பொதுவான ஜனநாயக மேடையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
2.144 உள்ளூர் பிரச்சனைகளில இடைவிடாத போராட்டத்தை நடத்துமாறு கட்சியின் கடந்த இரு அகில இந்திய மாநாடு களும் அழுத்தமாக வலியுறுத்தியபோதும் இந்தப் பணி போதிய அளவு மேற்கொள்ளப் படவில்லை. இந்த பலவீனம் களையப்பட வேண்டும். நவீன தாராள மயமாக்கல் காரண மாக மக்களின் வாழ்வாதாரம், நிலம், பொது விநியோக அமைப்பின் மூலம் உணவுப்பொருள்கள் வழங்கப்படுதல், வேலை, பாதுகாப்பு, நியாயமான ஊதியம், சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. இத்தகைய மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளைக் கையிலெடுத்து உள்ளூர் அளவில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருவதோடு, மாநில அளவிலான இயக்கங்களாகவும் நடத்திட வேண்டும். நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கெதிராக அகில இநதிய அளவிலும், மாநில அளவிலும் இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.
 
2.145 இளைஞர்கள் மற்றும் வேலையில்லாதவர் மத்தியில் கட்சியின் அரசியல் விரைவுபடுத்தப்பட வேண்டும். நகர்ப்புறப் பகுதியில் குறிப்பாக குடிசைப்பகுதி ஏழைமக்கள் வசிக்கும் பகுதியில் பணியாற்ற கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்களைப் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சனை களைக் கையில் எடுத்து போராட வேண்டும். குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
 
இடதுசாரி ஒற்றுமை
 
2.146 கடந்த 20 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிட் கட்சி ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளும் அகில இந்திய அளவில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 ஆட்சி காலத்தில் இந்த ஒத்துழைப்பு என்பது பல்வேறு கொள்கை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கக் கூடிய வகையில் நெருக்கமாக இருந்தது. 
 
2.147 அண்மைக் காலத்தில் சில பிரச்சனைகளில், குறிப்பாக தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்தான பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வேறுபட்ட நிலையைக் கொண்டுள்ளன. இதனால் ஆந்திரப்பிரதேசத்தில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்ட நிலைபாட்டை எடுத்து கூட்டு இயக்கங்களை நடத்தி வருகின்றன. தேர்தலில் இடது சாரிக் கட்சிகள் பின்தங்கிய நிலையில், மேற்கு வங்கத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இடதுசாரி ஒற்று மையைப் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகள் மற்றும் சந்தித்த பிரச்சனைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும் ஆனால் இந்த வேறுபாடுகளை விமர்சனபூர்வ மாகவும் தோழமை அடிப்படையிலும் களையவேண்டும். அப்போது தான் இடது முன்னணி பலவீனமடையாது. இடதுசாரிகள் மீதான கொடூரமான தாக்குதலை ஒன்றுபட்ட முறையிலும், மக்களிடம் ஒன்றுபட்ட முறையில் கொண்டு செல்வதன் மூலமும் சந்திக்க வேண்டும்.
 
2.148 சுயேச்சையான நடவடிக்கைகளுக்கும், இடதுசாரிகளை முன்னிறுத்து வதற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நவீன தாராள மயமாக்கல் மற்றும் ஏகாதிபத்திய தாக்கத்தை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளால் மட்டுமே உறுதிமிக்க போராட்டத்தை நடத்த முடியும் என்பதால் இடதுசாரி ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயமாகும்.
 
2.149 இடதுசாரிக்கட்சிகளுக்கு வெளியே இடதுசாரி மனோ பாவம் கொண்ட குழுக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளனர். இடதுசாரிகள் முன்னிறுத்தும் கொள்கை அடிப்படையிலான மேடையில் இவர்களையும் கொண்டுவர வேண்டும். இதற்கான முயற்சிகளைக் கட்சி எடுக்கும்.
 
இடது மற்றும் ஜனநாயகத் திட்டம்
 
2.150 மத்தியில் தொடர்ச்சியாக இருந்து வந்த அரசுகள், கடந்த 20 ஆண்டுகளாக தாராளமயமாக்கல் மற்றும் பெருமுத லாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வந்துள்ள நிலையில் முதலாளித்துவ – நிலப்பிர புத்துவ முறைமைக்கு இடது மற்றும் ஜனநாயக மாற்றே ஒரே உண்மையான மாற்றாக இருக்கமுடியும் என்பது மிகவும் தெளிவாகியுள்ளது. ஆலைத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப்பகுதி உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறுகடை வியாபாரிகள் மற்றும் அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன்களை இடது மற்றும் ஜனநாயகத் திட்டமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். உழைக்கும் மக்களின் அனைத்து பகுதியினரையும் இடது மற்றும் ஜனநாயக முன்னணி திட்டத்திற்கு ஆதரவாக அணிதிரட்டுவதன் மூலம் மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பதை நோக்கி முன்னேறவும், அடிப்படையான சமூக மாற்றத்தைக் கொண்டு வரவும் முடியும்.
 
2.151 தற்போதைய சூழலில் இடது மற்றும் ஜனநாயகத் திட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய கொள்கைகள் மற்றும் கோரிக்கைகளை இணைக்க வேண்டும். 
 
a. முழுமையான நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகபூர்வ மாற்றம், 
 
b.வளர்ச்சிக்கு சுயசார்பு பாதை, சர்வதேச நிதிமூலதனபாய்ச்சலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங்களை தேசிய மயமாக்குவது, திட்டமிட்ட மற்றும் சமச்சீரான வளர்ச்சி.
 
c. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, ஏகபோகத்தைத் தடுப்பது, பொதுத்துறையை மேம்படுத்துவது, செல்வத்தை மறுவிநியோகம் செய்ய நிதி மற்றும் வரிசார்ந்த நடவடிக்கைகள்.
 
d. ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அரசியல் முறை; மத்திய – மாநில உறவுகளைச் சீரமைத்தல் மற்றும் வலிமையான ஜனநாயகபூர்வ அதிகாரப் பரவல்; ஜனநாயகத்தை ஆழமாக வேர்பிடிக்கச் செய்ய அரசியல் சட்ட மாற்றங்கள், சர்வதேச உடன்பாடுகளை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கை; 
 
e. உயர்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை; தேர்தல் சீர்திருத்தம், பகுதிப் பட்டியல் முறையோடு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்துவது. 
 
f. அரசியல் சாசனத்தின் அடிநாதமாக அமையும் வகையில் மதச்சார்பின்மை நெறிமுறையின் அடிப்படையில் மதத்தையும் அரசியலையும் பிரிப்பது; வகுப்புவாத சக்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
 
g. நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பிற்கான உறுதி, நிர்வாகத்தில் தொழிலாளர் களுக்குப் பங்கு, உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல்.
 
h. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த பொது விநியோக முறைத் திட்டம்.
 
i. பொது மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதார முறையை வளர்த்தெடுப்பது. 
 
j. ஜாதிய ஒடுக்குமுறை களுக்கு முடிவு கட்டுவதன் மூலம் சமூக நீதியை உறுதிப்படுத்துவது, பெண்களுக்கு சம உரிமை, தலித்துகள் சிறு பான்மையினர் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு.
 
k. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி, தண்ணீர் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பெறுவதில் சமவாய்ப்பு.
 
l. ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையிலான சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை.
 
முன்நிற்கும் கடமைகள்
 
2.152 பல்வேறு பகுதி மக்களின் வாழ்க்கையை முழுவீச்சில் பாதித்துள்ள நவீன தாராளமயக்கல் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதே முக்கியமான கடமையாகும். உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், குறைந்த கூலி மற்றும் ஊதியம் பெறுவோர், கைவினைஞர்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் என அனைத்து பகுதியினரும் தீவிரமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதால் அவர்களது வாழ்விடத்திலிருந்து புலம் பெயர்ந்துள்ளனர். சுகாதாரம், கல்வி ஆகிய அடிப்படை வசதிகள் கூட அவர்களுக்கு மறுக்கப் படுகிறது. தேசிய, மாநில, உள்ளூர் என அனைத்து மட்டங்களிலும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்த வேண்டும். 
 
2.153 வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னோக்கித் தள்ளுவதற்கு துடிக்கும் வகுப்புவாத அரசியல் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. ஆர்எஎ மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக, பெரும்பான்மை வகுப்புவாதம் மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய காரணி களாக உள்ளனர். தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த போதும் பாஜக வகுப்புவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு விடவில்லை. இனிவரும் நாட்களிலும் வகுப்புவாதம் மற்றும் இந்துத்வா நடவடிக்கைகளை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும். அதே நேரத்தில் சிறுபான்மை வகுப்புவாதம் மற்றும் தீவிரவாதத்தை முறியடிப்பது குறித்தும் கட்சி விழிப்புடன் இருக்க வேண்டும். 
 
2.154 பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உட்பட அனைத்து நிலை களிலும் அமெரிக்காவுடனான கேந்திரக்கூட்டணியை வலுப் படுத்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்தக்கூட்டணி சுயேச்சையான அயல்துறைக் கொள்கைக்குத் தடையாக இருப்பதோடு உள்நாட்டுக் கொள்கையிலும் தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்திய-அமெரிக்க கேந்திரக்கூட்டு மற்றும் அதன் பல்வேறு விளைவு களை எதிர்த்த போராட்டங்களை கட்சி வலுப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடனான கூட்டை எதிர்ப்பதற்கு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும். மேலும், சுயேச்சையான அயல்துறைக் கொள் கையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும், உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்த்தும் மக்களை அணிதிரட்ட வேண்டும்.
 
2.155 தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை பொதுவான ஜனநாயக செயல்பாட்டுடன் இணைத்து நடத்தும் போராட்டத்திற்கு கட்சி தலைமை தாங்கும்,
 
2.156 மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிகளைப் பாதுகாப்பதற்கு மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதில் ஒட்டுமொத்தக் கட்சியும் களமிறங்க வேண்டும். வன்செயல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடவும் பாதகமான நிலைமையிலிருந்து மீளவும் கட்சி துணை நிற்கும். 
 
2.157 மாற்றுக் கொள்கைகளின் பின்னால் விரிந்து பரந்த ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அணிதிரள கட்சி பாடுபடும். மாவோயிஸ்ட்டுகளின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதி மிக்க போராட்டங்களை நடத்தும் அதே நேரத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தவும் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைக்கவும் கட்சி பாடுபடும்.
 
2.158 இடது மற்றும் ஜனநாயக மேடையின் கோரிக்கைகள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஏனைய உழைக்கும் மக்கள் பிரிவினரை, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கெதிராகவும் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான போராட்டத்திலும் கட்சி அணிதிரட்டும். முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள மக்களை வென்றெடுக்க அவர்களது பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவதில் கட்சி கவனம் செலுத்தும்.
 
முன்னேற வேண்டிய பாதை
 
2.159 மேற்கூறப்பட்ட கடமைகள் மற்றும் பணிகளை நிறைவேற்ற ஒட்டுமொத்தக் கட்சியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாடு அறைகூவி அழைக் கிறது. உழைக்கும் மக்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான போராட் டத்திற்கு கட்சி தலைமை தாங்க வேண்டும். நிலம் உணவு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். வகுப்புவாத, பிளவுவாத சக்திகளை முறியடித்து மதச்சார்பின்மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாக்கும். அனைத்து நிலைகளிலும் ஏகாதிபத்திய நிர்ப்பந்தத்தை எதிர்த்துப போராட வேண்டும். 
 
I. மக்களின் மீது நம்பிக்கை கொண்டு அவர்களை அணிதிரட்டுவதன் மூலம் கட்சி மீதான தாக்குதல் மற்றும் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆற்றலுடன் முறியடிப்போம். 
 
II. மார்க்சிய-லெனினியத்தை உயர்த்திப் பிடித்து, உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரோடும் கட்சி நெருக்கமாகப் பணியாற்றும். இடது ஜனநாயக மேடையை மையப்படுத்தி அவர்களை அணி திரட்டும்.
 
III. நாடு முழுவதும் வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவோம். அனைத்துப் பகுதி  உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் வல்லமை கட்சிக்கு உண்டு.
 
IV. வர்க்கச் சுரண்டல் மற்றும் இந்திய மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக அயர்வற்ற, உறுதியான போராட் டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதன் மூலம் மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான புதிய, மாற்றுப் பாதையில் முன்னேறுவோம்.
*********
இதை ஆங்கிலத்தில் படிக்க 
 
http://www.cpim.org/content/political-resolution-adopted-20th-congress
 

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply