அரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

 1. தென்பெண்ணை ஆற்றின் வலதுபுறக் கால்வாயை மொரப்பூர்  வரை நீட்டித்து ஏரிகளில் நீர் நிரப்பிட
 2. சென்னாக்கல் அணைக்கட்டு திட்டத்தை அமலாக்கிட
 3. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கூட்டுறவுத்துறை சார்பில் சேகோ ஆலைகள் நிறுவிட
 4. அரூர் பகுதியில் தொழில் வளர்ச்சிக்காக சிட்கோ தொழிற்பேட்டை அமைத்திட
 5. சித்தேரி, சிட்லிங் மலைப் பகுதி கிராமங்களின் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் தீட்டி செயல்படுத்திட
 6. தீர்த்தமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்திட
 7. அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்திட
 8. வாழ்வாதாரத்தை சீரழிக்கும் எட்டு வழிச் சாலையை கைவிட சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர
 9. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக ஓடும் காவிரி ஆற்றின் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிகளிலும் நிரப்பி விவசாயம் செழித்திட
 10. அரூர் சட்டமன்ற தொகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களின் குழந்தைகளின் சாதிச் சான்றிதழை விரைந்து கிடைத்திட
 11. அரூர் சட்டமன்ற தொகுதியில் வசித்து வரும் வீடற்ற அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா கிடைத்திட
 12. அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து கோடை காலங்களில் வரக்கூடிய விலங்குகளால் விவசாய விளைபொருட்கள் பாதிப்புகளை தடுக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட
 13. மொரப்பூர் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்திட
 14. கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே உள்ள புதன் சந்தையில் சந்தை புறம்போக்கு நிலத்தில் விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் காய்கறி பழவகைகளை பதப்படுத்தும் சந்தை உருவாக்கிட
 15. அரூர் பெரிய ஏரி கால்வாய், வாணியாறு வரை ஆக்கிரமிப்பை அகற்றி காங்கிரீட் தளம் அமைக்க – அதன் மூலம் கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுத்திட
 16. அரூர் 12வது வார்டு 10 தெரு மக்களுக்கு பட்டா கிடைத்திட

வாக்களிப்பீர் !
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்

Check Also

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download Related