அ. சவுந்தரராசன் – பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதி வேட்பாளர் அ.சவுந்திரராசன் 64 வயதுடையவர். பி.ஏ. பட்டதாரி. சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் வி.பி.சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 1971-ஆம் ஆண்டிலிருந்து முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

1971 முதல் தொழிற்சங்கப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். தொழிற்சங்க, அரசியல் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு, பல முறை சிறையிலடைக்கப்பட்டார். சமீபத்தில், ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களை சங்க ரீதியாக அணி திரட்டுவதில் முன்னணி ஊழியராக இருந்து, அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். தற்போது அந்த சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

சிஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச்செயலாளராக 8 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிஐடியுவின் அகில இந்திய  செயலாளர், அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனத் துணைத்தலைவர் என அகில இந்திய பொறுப்புகளிலும் இருந்து வருகிறார். தொழிற்சங்க மாநாடுகளில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply