ஆனந்த் டெல்டும்பே, கவுதம் நவ்லகா கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பீமா கொரேகான் பிரச்சனையில் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

கோவிட்-19 தொற்று காரணமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கைது செய்யப்படுவதை ஒத்தி வைக்காதது கவலைப்படத்தக்க விஷயமாகும்.

ஆனந்த் டெல்டும்பே, சாதி மற்றும் வர்க்கம் போன்ற பிரச்சனைகள் மீது ஆய்வு செய்துவரும் ஓர் அரசியல் அறிஞர். பாபா சாகேப் அம்பேத்கரின் குடும்பத்தில் ஓர் உறுப்பினர். கவுதம் நவ்லகா மனித உரிமைப் போராளியும், அரசியல் செயற்பாட்டாளருமாவார்.

இவர்கள் இருவரும் அம்பேத்கர் ஜெயந்தி அன்று கைது செய்யப்பட்டிருப்பது, நம் நாட்டின் விவகாரங்கள் இருந்துவரும் மோசமான நிலையினை வெளிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றம் தன் முடிவினை மறு ஆய்வு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. ஒரு நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...