ஆர்கே.நகர் சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஆர்.லோகநாதன் வேட்புமனுத் தாக்கல்

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் CPIM வேட்பாளர் ஆர்.லோகநாதன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் செவ்வாயன்று (மார்ச்21) தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி நாயரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தண்டையார்பேட்டை செரியன் நகரில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலை, காசிமேட்டில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை, மணிகூண்டு அருகே உள்ள தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து செங்கொடி அணிவகுப்போடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

This slideshow requires JavaScript.

 

தேர்தல் களம் கூட எங்களுக்கு போராட்டம் களம்தான். மக்கள் பிரச்சனை தீரும் வரை தொடர்ந்து போராடுவோம். ஊழல், கிரிமினல், ரவுடிசத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தில் நாங்கள் வெற்றி மக்கள் பணி ஆற்றுவோம் என வேட்பாளர் சூளுரைத்த வேட்பாளர் லோகநாதன், அடிப்படைத் தேவைகள், சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் ஊழலற்ற நிர்வாகம் நடைபெற உழைப்போம் என்றார்.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...