ஆர். ராமமூர்த்தி – விக்கிரவாண்டி தொகுதி

 விக்கிரவாண்டித் தொகுதியில் போட்டியிடும் ஆர். ராமமூர்த்தி வழக்கறிஞராக கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். அவருக்கு வயது 63. இந்திய மாணவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். 1971 முதல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் மாநில செயல்தலைவராக செயல்பட்டு வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பல ஆண்டுகளாக பணியாற்றுகிறார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

Check Also

தோழர் ஏ.அப்துல் வஹாப் மறைவுக்கு அஞ்சலி

தமிழகத்தில் மார்க்சிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றிய தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

Leave a Reply