இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் மறைவு சிபிஐ (எம்) இரங்கல்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமாபேகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர். ரகுமானுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து இசைத்துறையில் அவர் உலக அளவில் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் கரீமா பேகம் ஆவார்.

ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற போது அவ்விருதுகளை தன்னுடைய தாய்க்கு சமர்ப்பிப்பதாக கூறியது தனது தாயின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய அன்பையும், மரியாதையையும் எடுத்துக்காட்டியது.

தாயாரை இழந்து வாடும் ஏ.ஆர். ரகுமானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரிலிருந்து மீண்டு அவர் தனது இசைப்பயணத்தை தொடர வேண்டும்.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...