இடதுசாரி கட்சிகள் சார்பில் டிசம்பர் 7 இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டம்!

மத்தியில் ஆட்சியிலுள்ள மோடி அரசும், பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளும் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையினையும், இந்திய அரசியல் சாசனத்தையும் நிர்மூலம் ஆக்க திட்டமிட்ட சதிகளை மேற்கொண்டு வருகின்றன. அயோத்தியில் ஏற்கெனவே பாபர் மசூதியை இடித்த மதவெறி அமைப்புகள் தற்போது ராமர் கோவில் கட்ட வேண்டுமென வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இம்மதவெறி சக்திகளை எதிர்த்தும், இந்திய அரசியல் சாசனத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாத்து,  நிலை நிறுத்திட அம்பேத்கர் நினைவு தினத்தில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்கங்கள் நடத்திட இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்துவதற்காக இடதுசாரி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (28-11-2018) சென்னை சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஐ(எம்) சார்பில் கே.பாலகிருஷ்ணன்- மாநில செயலாளர், டி.கே.ரங்கராஜன் எம்.பி-மத்தியக்குழு உறுப்பினர், பி.சம்பத்-மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ சார்பில் இரா.முத்தரசன்-மாநில செயலாளர், நா.பெரியசாமி-மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்-எல்) சார்பில் ஆர்.வித்யாசாகர்-மத்தியக்குழு உறுப்பினர், ஏ.எஸ்.குமார்- மாநில நிலைக்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி வரும் டிசம்பர் 7 அன்று, தலைநகர் சென்னையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் மதவெறி சக்திகளால் விடப்பட்டுள்ள  சவாலை எதிர்கொள்ள அனைத்து தரப்பு மக்களும் ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டுகிறோம்.

இங்ஙனம்

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், சிபிஐ(எம்)

இரா.முத்தரசன், மாநில செயலாளர், சிபிஐ

ஆர்.வித்யாசாகர், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்எல்)லிபரேசன்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...