இந்தியப் புரட்சி சாத்தியமே! – சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாடு திருநெல்வேலியில் நவ.12-14 வரை நடைபெற்று வருகிறது. இதையொட்டி சனியன்று மாலை பாளையங்கோட்டையில் நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு விழா நடைபெற்றது. ‘சோசலிசமே மாற்று’ என்ற தலைப்பில், பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ‘சமூக ஒடுக்குமுறை நெருக்கடிகள் தீர்வுகள்’ என்ற தலைப்பில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, ‘தமிழக அரசியல் சவால்கள்’ என்ற பொருளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

உலக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வலதுசாரிகள் எதுவும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களை இடதுசாரி கட்சிகள் தம் பக்கம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் வலதுசாரிகள் அம்மக்களை அவர்கள் பக்கம் கொண்டு போவதோடு, சுரண்டலிலும் ஈடுபடுவார்கள்.

எனவே, வலதுசாரிகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக வலுவானப் போராட்டத்தை நடத்த வேண்டும். இந்திய மண்ணிலும் சோசலிசத்தை கட்ட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. உலகில் எந்த நாட்டுப் படையாலும் வீழ்த்த முடியாத ஹிட்லரை வீழ்த்தியது சோவியத் படையே. மகத்தான அக்டோபர் புரட்சி உலகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

சீனாவில் மகத்தான புரட்சி நடந்து, மக்கள் சீனம் மலர்ந்தது. இன்று சீனம், உலகின் தலைசிறந்த நாடாக வளர்ந்து நிற்கிறது. கியூபாவும், வியட்நாமும் மகத்தான புரட்சி நடந்த பின் சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடித்து, எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளன. பட்டினியற்ற தேசங்களாக மாறியுள்ளன. எனவே, உண்மையான மாற்றத்தை கொண்டு வருவது சோசலிசம் மட்டுமே. அது இந்தியாவிலும் வர வேண்டும். அதற்கான இயக்கங்களை முன்னெடுப்போம். கட்சியை வலுவாகக் கட்டுவோம்.

Check Also

உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்!

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ...