இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

அண்மையில் பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்ற நெஞ்சை உலுக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. காரணங்களை உறுதி படக் கூறமுடியவில்லை என்றாலும், கந்து வட்டித் தொல்லை என்பதும், கடைசி குழந்தையின் மன நல நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதும் காரணங்களாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகின்றது.

இன்றைய நவீன தாராளமயக் கொள்கைகளின் பின்னணியில், அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடியைக் கடன் வாங்காமல் சமாளிக்க வறுமையில் உழலும் ஒரு குடும்பத்திற்கு வாய்ப்பில்லை. அதே போல், ஆரோக்கியம், உடல் நலம் என்பதும் கார்ப்பரேட்மயச் சூழலில், ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

மானியங்களைப் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் அரசின் கொள்கை முடிவுகளால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உத்தரவாதமில்லாத அவல நிலை நிலவுகிறது. வாழ வழியின்றி ஏழைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிற கொடுமை ஆங்காங்கே நடக்கத் துவங்கியிருக்கிறது. இது, தொடர்கதையாகாமல் தடுக்கும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு. கொள்கை பக்கவாதம் என்று பெரு முதலாளிகள் கூறினால் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கும் அரசு, ஏழை உழைப்பாளி மக்களின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டும். இச்சம்பவம் குறித்து மாநில அரசு உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் பெய்த பெருமழையால் சுமார் 37 பேர் பலியாகியுள்ளனர். தேங்கிக் கிடக்கும் தண்ணீருக்குள் மின்சாரக் கம்பியிருந்து அதனால் மின்சாரம் பாய்ந்து சிலர் இறந்துள்ளனர். இது, நிர்வாகத்தின் கவனக் குறைவு மற்றும் அலட்சியப் போக்கினாலேயே நடந்திருக்கிறது.  

ஏற்கனவே, வட மேற்கு பருவ மழை பொய்த்ததால், குறுவை பாதிக்கப் பட்டது. சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் ஏங்கிய சூழலில், கூடுதல் மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழை பெய்தால் அதை முறையாக பயன்படுத்த, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள போதுமான தயாரிப்புகள் அரசு தரப்பில் செய்யப் படவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இயற்கையின் சீற்றத்திலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply