இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழு‍ கூட்டத் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கு இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அதிமுக அனைத்துவிதமான அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு ஜனநாயக படுகொலையை நடத்தி, அதிமுக மட்டுமே அனைத்து பதவிகளையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

கூட்டுறவு தேர்தலை நடத்த அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் வெறும் பார்வையாளராக இருந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆளும் அதிமுக தலைமை, கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதிமுக-வின் அடாவடித்தனத்தை எதிர்த்து தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் வீறுமிக்க கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அமைப்புகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... சிபிஐ(எம்) கண்டனம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

Leave a Reply